வானிலை அறிக்கை தமிழகத்தில் இன்று மாவட்டங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஆங்காங்கே 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல். வானிலை அறிக்கை தமிழகத்தில் இன்று மாவட்டங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளன.
கடலூர், விழுப்புரம், அரியலூர், காரைக்கால், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, மதுரை, நீலகிரி, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த ஓரிரு நாட்கள் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளன.
Chances for rain in districts of tn