செய்திகள்தமிழகம்

ரயில் சேவைக்கு நாளை முன்பதிவு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா தளர்வடைந்ததா?

மக்களே பயணிக்க தயாரா! பேருந்து மற்றும் ரயில் சேவை வரும் திங்கட்கிழமை துவங்குகிறது. பேருந்து சேவைக்கான முன்பதிவு இன்று மதியம் ஒரு மணிக்கு துவங்கியதை தொடர்ந்து நாளை ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்குகிறது.

ரயில் சேவைகள்

7 செப்டம்பர் 2020 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மட்டுமே ரயில் சேவை துவங்குகிறது.

கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி, விழுப்புரம்-மதுரை திருச்சி-நாகர்கோவில், திருச்சி-செங்கல்பட்டு (இரு வழி), அரக்கோணம்-கோவை இன்டர்சிட்டி ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை திங்கக்கிழமை துவங்குகிறது.

ஜூன் மாதத்தில் இயங்கிய சிறப்பு ரயில்களே தற்போதும் இயங்க உள்ள நிலையில் இருக்க தமிழக அரசு ரயில்வே துறைக்கு மேலும் சில ரயில் சேவையை அதிகரிக்குமாறு விண்ணப்பம் விடுத்துள்ளது.

பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் மக்களின் போக்குவரத்திற்காகவும் மேலும் சில ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு ரயில்வே துறைக்கு கீழ்காணும் பட்டியலில் உள்ள ரயில் சேவையை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637/12638), சென்னை கோவை சேரன் எக்ஸ்பிரஸ் (12673/12674), சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633/12634), சென்னை தூத்துக்குடி சிட்டி எக்ஸ்பிரஸ் (12693/12694), சென்னை மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12671/12672), சென்னை செங்கோட்டை சிலம்பா எக்ஸ்பிரஸ் (16181/16182).

பயணச்சீட்டு முன்பதிவு

நாளை துவங்க இருக்கும் முன்பதிவிற்காக ரயில் பயணச்சீட்டு வழங்கும் கவுன்டர்களின் முன் வெள்ளை வளையங்கள் இடப்பட்டு வருகிறது. நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் ஹேண்ட் சனிடைசரை பயன்படுத்திய பின்பே நுழைய வேண்டும் என்ற விதிமுறையை மறவாதீர்கள்.

முன்புபோல் காலை 8 மணி அளவில் முன்பதிவு கவுண்டர்கள் துவங்குகிறது. சமூக இடைவெளி மறவாமல் எந்த வித அவசரமும் இல்லாமல் மக்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது அவசியம்.

முக்கியமான விஷயமாக முன்பதிவு செய்யாதவர்கள் ரயிலில் பயணிக்க முடியாது என்பதை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மக்களே பேருந்து ரயில் என இரு துறையும் நமக்கு சேவை புரியும் வண்ணம் செயல்படுகிறது நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து தகுந்த கட்டுப்பாடுடன் பாதுகாப்புடனும் பயணத்தை மேற்கொண்டு கொரோனாவை வெல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *