Ragukala Pooja : தீய சக்திகளை விரட்டி அடிக்கும் செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை
துர்க்கை அம்மனை வழிபட ராகு காலமே மிக உகந்த சிறந்த நேரமாகும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வேண்டி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.
செவ்வாய்கிழமை ராகு கால பூஜை
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு உரிய மங்களகரமான நாளாகும். மங்களம் நிறைந்த செவ்வாய்க்கிழமையில் ராகு கால பூஜை செய்தால் எப்படிப்பட்ட தீய சக்திகளும் விலகி வீட்டில் தெய்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை ராகுகால பூஜை செய்வது துர்க்கை அம்மனுக்கு செய்யக்கூடிய மற்ற பூஜைகளை காட்டிலும் மிகச் சிறந்த சிறப்பு வாய்ந்த பூஜையாகும். இந்த பூஜையால் ஒருவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் தேவையான நற்பலன்கள் துர்கா தேவி தருவார்.
செவ்வாய்கிழமை ராகுகால பூஜை முறைகள்
செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை இருக்க நினைப்பவர்கள் மஞ்சள் நிற பூக்களான சாமந்தி , நந்தியாவட்டை , தங்க அரளி ஆகிய மலர்களை துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனைக்கு வைக்க வேண்டும்.
மஞ்சள் நிற வாழைப்பழம் , மாம்பழம் ,பலாப்பழம் , எலுமிச்சை சாதம் மஞ்சள் வண்ண வெண்பொங்கல் ஆகியவற்றை துர்க்கை அம்மனுக்கு நெய் வைத்தியமாக படைக்க வேண்டும். அனைத்தும் செய்ய முடியாதவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்யலாம்.
எலுமிச்சம் பழத்தில் 9 விளக்குகள் தயார் செய்து அதில் நல்லெண்ணெய் அல்லது ஆயுளை அதிகரிக்கும் இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மங்களம் நிறைந்த ராகு கால பூஜை செய்யும் பொழுது துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிற எலுமிச்சை மாலை போட்டு வழிபடுவது மிக சிறந்ததாகும்.
ராகு கால பூஜை செய்பவர் அருகில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள வயதான சுமங்கலி பெண்களுக்கு பூ பழம் வெற்றிலை பாக்கு காணிக்கை ஆகியவற்றை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது துர்கா தேவியே நேரடியாக வந்து ஆசீர்வாதம் செய்ததற்கு சமமாகும்.