ரூம் போட்டு யோசிப்பாங்களோ! ராதே ஷ்யாமிற்கு கிடைத்த வரவேற்பு
ராதே ஷ்யாம் பிரபாஸ் 20 படம் பத்தாம் தேதி 10 மணி அளவில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் பிக்சருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் வெளிவரும் இருக்கும் ராதே ஷ்யாம் படத்திற்கு மாநில வாரியாக பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அசாம்
பிரபாஸ் பூஜா இருவரும் காதல் பிணைப்பில் இணைந்து ஒரு ரொமாண்டிக் போஸ் கொடுத்து இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் அசாம் போலீஸ் முகமூடி அணிந்தவாறு வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விழிப்புணர்விற்காக மாற்றப்பட்டு இருக்கும் அசாம் போலீசில் அறிவிற்கு ஒரு பலத்த கைத்தட்டல் கொடுத்துடுங்க.
ஹைதராபாத்
ஐதராபாத்தில் உள்ள பிரபாஸ் ரசிகர் சங்கத் தலைவர்கள் தற்போது அத்தியாவசிய தேவையான முகமூடிகளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அச்சிட்டு இலவசமாக ஏழை மக்களுக்கும் தினசரி தொழிலாளர்களுக்கும் நன்கொடையாக வழங்குகின்றனர்.
மற்றோரு இடத்தில் இளம்வயது ரசிகர்கள் ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். பிரபாஸ் வெறிகொண்ட ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருக்கிறார்.