சினிமா பாடல்கள்

ராசா ராசா உன்ன வச்சுருக்க… மானஸ்தன் படம்

மானஸ்தன் இப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் குடும்ப திரைப்படம் ஆகும். இதில் சரத்குமார் மற்றும் சாக்ஷி சிவானந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கே பாரதி இயக்கியுள்ளார். இதில் எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகள்

பெண் : ஆஆ ….. ஆஆ
ஆஆ….. ஆஆ ….. ஆஆ
ஆஆ

ஆண் : ம்ம்ம்ம்…… ஹ்ம்ம்
ம்ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ம்……
ஹ்ம்ம்…… ம்ம்ம்ம்ஹ்ம்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல

மேலும் படிக்க ; கொக்கு சைவக் கொக்கு… முத்து படம் பாடல்

ஆண் : நீயும் இல்லாம
நானும் இல்லை

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : …………………………

ஆண் : ராசாத்தி நீயும்தான்
பூகோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம்
வாங்கி வருவேன்

பெண் : சாமிய சந்திச்சா
என் ஆயுள் காலத்தை
உன்னோட சேர்க்கும் வரம்
வாங்கி வருவேன்

ஆண் : தோளுலே ஊஞ்சல்
கட்டி தோகமயிலே தாலாட்டுவேன்

பெண் : வீசும் காத்தை
சல்லடையால சரிச்சு
தூசி எடுப்பேன் உனக்கும்
மூச்சு குடுப்பேன்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்

ஆண் : முள்ளைப்பூ காம்புதான்
உன் கையை குத்தாதா ஊருக்குள்
காம்பில்லாத பூவும் பூக்காதா

பெண் : செம்மண்ணின் புழுதி
உன் கண்ணில் விழுமே புழுதி
காத்தில்லாம பூமி சுத்தாதா

ஆண் : மூக்குத்தி குத்தாதடி
எனக்கு வலிக்கும் வேணாமடி

பெண் : உனக்கு வலிச்சா
மறுநொடி நானும் உசுர
கையில் எடுப்பேன் உனக்கு
நானும் குடுப்பேன்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல

ஆண் : நீயும் இல்லாம
நானும் இல்லை

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

மேலும் படிக்க ; தவசி படம் பாடல் வரிகள் பஞ்சாங்கம் பார்காத மாமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *