ஆன்மிகம்ஆலோசனை

ராகு கேது பெயர்ச்சி வழிபாடு

நவகிரகங்களில் நிழல் கிரகமாக குறிப்பிடுவது ராகு-கேது. சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி போன்று அடுத்து பார்க்கப்படுவது ராகு கேது பெயர்ச்சி. செப்டம்பர் ஒன்றாம் தேதி ஆவணி 16 செவ்வாய்க்கிழமை ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இப்பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிட நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிடம் இரண்டாவது பாதத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதேபோல கேது பகவான் தனுசு ராசியின் மூலம் ஒன்றாம் பாதத்தில் இருந்து, விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.

பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும், இப்பெயர்ச்சி நடைபெற உள்ளன. இன்றைய நாளில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வீட்டின் பூஜை அறையிலோ அல்லது கோவிலுக்கு செல்ல முடிந்தால் கோவிலுக்கு சென்று ராகு கேதுவை வழிபடலாம்.

12 ராசிக்காரர்களும் தொடர்ந்து ராகு கேதுவின் நற்பலனை பெறுவதற்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் ராகு நேரத்தில் துர்க்கையை வழிபட்டு வரலாம். சனி, ஞாயிறு கிழமைகளில் விநாயகரை வழிபடுவதால் கேதுவின் நற்பலன்களை பெறலாம்.

இந்த ராகு கேது பெயர்ச்சி நாளிலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டு, கோவில்களில் நவகிரகத்தில் உள்ள ராகு கேது பெயர்ச்சிக்கு பூஜை நடைபெறும். பூஜையில் கலந்து கொண்டு ராகுவிற்குரிய கேதுவிற்குரிய கொள்ளு, உளுந்து தானியத்தையும் தானமாகக் கொடுக்கலாம் அல்லது கொள்ளு, உளுந்து பயன்படுத்தி சாதம் செய்து கோவில்களில் பிரசாதமாக வழங்கலாம்.

இது எளிய பரிகாரம். அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்ற பரிகாரமாகும். இன்றைய காலகட்டத்தில் உங்களால் முடிந்த அளவு இந்த பரிகாரத்தை செய்து ராகு கேதுவின் நற்பலனை அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *