டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வினாவிடை தொகுப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கான    நடப்பு நிகழ்வுகளின் வினாவிடை தொகுப்பு தேர்வை வெல்ல படியுங்கள்.  போட்டி தேர்வின் முக்கிய அம்சமாக  நடப்பு நிகழ்வுகள் திகழ்கின்றன.

 1. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா என்ற திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
விடை: ஜம்மு காஷ்மீர்

2. 2017 ஆம் ஆண்டுக்கான ஆசியான்  விருது பெற்ற இந்திய கடற்படை கேப்டன் ராஜ்குமார் தான் செய்த எந்த சேவைக்காக விருதினைப் பெற்றார்?
விடை: கேரளா வெள்ளத்தின் போது செய்த தன்னலமற்ற சேவைக்காக

3. சென்னையின் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க அறிமுகப்படுத்திய செயலியின் பெயர் என்ன?
விடை: சிசிடிவி சென்னை நகரம்

4. சுற்றுலா துறைக்கு என்று தனிப்பட்ட காவல்துறையை உருவாக்கிய முதல் மாநிலம் எது?
விடை: அருணாச்சலப் பிரதேசம்

5. சுற்றுலாத் துறைக்கு என்று தனிப்பட்ட காவல்துறையை உருவாக்கிய இரண்டாவது மாநிலமாக அழைக்கப்படுவது எது?
விடை: நாகலாந்து

6.பிரதம அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
விடை: 5

7. பிரதம அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 
விடை: 2017 செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது

8. இந்திய ரிசர்வ் வங்கியானது இணைய பாதுகாப்பு விதிமுறையை மீறியதற்காக எந்த வங்கிக்கு அபராதம் விதித்தது?
விடை: இந்தியன் வங்கிக்கு ரூபாய் ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டது 

9. புதுடெல்லியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கான கட்டிட ஆற்றல் பாதுகாப்பு குறியீடாக அறிவிக்கப்பட்டது யாது?
விடை: எக்கோ எக்ஸ்போ 2018

10. உறுப்பு தானம் செயலாக்கத்திற்கு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சிறந்த செயல்பாட்டுக்கான விருதினை பெரும் மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு மாநிலம் இதனை நான்காவது முறையாக பெறுகின்றது.

11.தமிழ்நாடு அரசு நல வாரியம் யாருடைய தலைமையில் ஆரம்பித்துள்ளது?
விடை: முதல்வர் தலைமையில்

12.திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப் வீடியோ2018 பட்டம் பெற்றவர்?
விடை: கோயம்புத்தூரைச் சேர்ந்த வடிவமைப்பாளர் மற்றும் ஒப்பனையாளர்மான சம்யுக்தா பிரேம்

13அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அறிஞர்கள் கோப்பை போட்டியில் இளையோர் விவாத சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
விடை: ஆதி சாய் விஜய் கரன்

14.இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு திறன்களுடன் அதிக வேலைவாய்ப்பு உள்ள மாநிலமாக திகழ்வது எந்த மாநிலம்?
விடை: ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆகும்

15. ரக்‌ஷயா கயான் சக்தி திட்டம் தொடங்கப்பட்ட காரணம்?
விடை: உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறையின் அறிவுசார் சொத்துரிமை கலாச்சாரத்தை மேம்படுத்த

16.இந்தியா இந்தோனேஷியா வர்த்தக கருத்தரங்கு தொடங்கப்பட்ட மாநிலம்?
விடை: அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில்

17.நீரின் தாக்கம் குறித்து2018 ஆம் ஆண்டுக்கான இந்திய உச்ச மாடானது நடைபெற்ற இடம்?
விடை: புதுடெல்லி

18. 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஸ்டார்ட் அப் இந்தியா துணிகர மூலதன உச்சி மாநாடு நடைபெற்ற இடம்?
விடை: கோவா

19.இந்திய கடலோர காவல்படை யானது ஒலிவா நடவடிக்கையை எங்கு துவங்கியது?
விடை ஒடிசாவின் வனத்துறையின் கீழ் தொடங்கியது

20.மத்திய அரசின் கடல்சார்விதிமுறைகளை அறிமுகப்படுத்திய 2018 ஆம் சிறப்பு ?
விடை: இந்திய பிராந்தியத்திற்குள் விமானம் மற்றும் கடல் பயணங்களின் போது தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள வசதியை இது அனுமதிக்கின்றது

21. நிதி ஆயோக்கின் திட்டத்தின் பெயர் என்ன?
விடை : பொது இந்தியாவிற்கான யுத்தி @75 ஆவணத்தை வெளியிட்டுள்ளது

22.புதிய கடலோர ஆய்வு கப்பலான சாகர் தரவானது எந்த கப்பல் தளத்தில் வெளியிடப்பட்டது?
விடை: கொல்கத்தாவின் திட்ட கார்க் வேகன்ஸ் லிமிடெட் தளத்தில் வெளியிடப்பட்டது

23. 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸானது தொடங்கி வைக்கப்பட்ட இடம் எது?

விடை: ஒடிசா  

24. சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் த பெயர் பெற்ற தீவு எது?

விடை: ராஸ் தீவு 

25. உலகின் மிகவும்  பணக்கார நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள  இந்திய நகரம் யாது?

விடை: மும்பை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *