டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை தொகுப்பு!

குரூப் ஒன் போட்டி தேர்வை வெல்ல  நடப்பு நிகழ்வுகளின்  மாதிரி கேள்வி பதில்களின் தொகுப்பு இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். அதனைப் படிக்கவும் போட்டி தேர்வின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளில் சமிப கால தேர்வில்  நடப்பு நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது.கவனத்துடன் படித்தல் என்பது அவசியமாகும். 

 1. இந்தியாவின் எந்தப் பகுதியில் 4 கொம்புகளையுடைய தவளை இனங்களை கண்டறிந்தனர்?
விடை: இந்தியன் இமயமலை பிராந்தியம்

2. இந்தியாவின் தவளை மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: எஸ். டி பிஜு

3. ஹூக்ளி ஆற்றில் சுதந்திர போராட்ட வீரர்களின் பயிரிடப்பட்ட எந்த இரண்டு விரைவு ரோந்து கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன?
விடை: ஐசிஜிஎஸ் அம்ரித் கவுர் மற்றும் ஐசிடிஎஸ் கமலாதேவி கப்பல்கள் ஆகும்

4. இந்திய விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை இருநாடுகளிடையே நடைபெறும் பயிற்சி தொடரின் பெயர் யாது? விடை: எக்ஸ் கோப் இந்தியா- 2018

5. பாவ வரியினை எந்த நாடு அறிமுகப்படுத்தவுள்ளது?
விடை: பாகிஸ்தான்

6. முதல் இந்தியா ஆசியான் இன்னோடெக் உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
விடை: புதுடெல்லியில்

7. 2001 முதல் 2010 வரையிலான இந்திய கடற்படையின் வரலாற்றைக் கூறும் நூலின் பெயர் என்ன?
விடை: நீலக்கடல் புரட்சி

8 நீலக்கடல் புரட்சி எனும் நூலின் ஆசிரியர் யார்?
விடை: சுனில் லம்பா

9. டெல்லி அரசு போக்குவரத்து வசதியை மேம்படுத்த அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின் பெயர் என்ன?
விடை ஒரு டெல்லி ஒரு அட்டை

10. விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றவர் சப்னா பார்மானை விளம்பர தூதுவராக அறிவித்துள்ள அமைப்பு எது?
விடை: பாரத் ஸ்டேட் வங்கி

11. 13வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி எது? விடை: நாகர்கோவில்

12. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ரயில் Train- 18 இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது?
விடை: சென்னைை

13. இந்தியாவின் எந்த சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் 2018 செப்டம்பர் 27ல் அறிவித்தது?
விடை: இந்திய தண்டனைச் சட்டத்தின் 497 வது பிரிவு

14. மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எந்த பகுதியை பன்ஷிதார் நகர் என பெயர் மாற்றம் செய்தது?
விடை: நகர் உந்நாரி நகரம் ரயில் நிலையம்

15. இந்தியாவிலேயே முதல்முறையாக எந்த மாநிலத்தில் மக்காச்சோள திருவிழாவானது நடத்த பட்டது? விடை: மத்திய பிரதேச மாநிலம்

16. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது சிங்க சவாரி தொடங்கப்பட்ட இடம் யாது?
விடை: நகர்கார்

17. ராஷ்ட்ரா மாதா திட்டமானது எதை அடிப்படையாகக் கொண்டு உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை ஆனது ஒப்புதல் வழங்கியது?
விடை: பசு இனங்களை பாதுகாக்க அவற்றின் நலம் பேண

18. ஒடிசா மாநிலத்தின் ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: ஜர்சகுட விமான நிலையம்

19. ராஜஸ்தான் மாநில அரசானது வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களுக்கு இலவசமாக கைப்பேசிகளை வழங்க அறிவித்துள்ள திட்டத்தின் பெயர் என்ன?
விடை: பாமாஷா திட்டம்

20. கவச் என்னும் தீவிரவாத எதிர்ப்பு படையை புறாக்களை மாநிலம் எது?
விடை: ஹரியானா

21. இந்தியாவின் எந்த மாநில அரசானது நீலப் புரட்சி இந்த ஒருங்கிணைந்த மீன்வளத் துறை மேம்பாடு குறித்த திட்டத்தினை தொடங்கியது?
விடை: மேகாலயா

22. இந்தியாவின் முதலாவது நாய்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பூங்காவானது அமைந்துள்ள இடம் எது?
விடை: தெலுங்கானாவின் ஹைதராபாத்தில்

23. ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனமானது இந்தியாவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
விடை: இரண்டாம் இடம்

24. அலுவலகப் பயன்பாட்டுக்காக எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி உள்ள அரசு எது?
விடை: ஜார்கண்ட் மாநில அரசு

25. உலகிலேயே புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த நாடு எது?
விடை: நேபாளம்

26. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான S கற்றை ஒளியியல் மானியுடன் கூடிய டாப்ளர் வானிலை முன்னறிவிப்பு ராடாரை எங்கு தொடங்கியுள்ளது?
விடை: ஸ்ரீ ஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *