டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை!

போட்டி தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கும் வேளை இது குரூப் 2 தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும்  தேர்வு ஜுரத்தில் படித்து கொண்டிருக்கும் வேளையில் சிலேட்குச்சி  நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகளை வினா-விடையாக கொடுத்துள்ளது அதனை பயிற்சி செய்யுங்கள் தேர்வினை வெற்றி பெறுங்கள். 

1) மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை எந்த ஐரோப்பிய நாட்டில் இந்திய ஜனாதிபதி திறந்து வைத்தார்?விடை – பல்கேரியா
2) இந்தி இருக்கை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பலகலைக்கழகம்?

விடை – சோபியா பல்கலைக்கழகம் (பல்கேரியா)
3) அமெரிக்காவின் உயரிய ‘மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது-2018 பெறுபவர்? 

விடை – ராஜலட்சுமி நந்தகுமார் (மதுரை)
4) பாம்பு கடிக்கு, குறைந்த விலையில் மருந்து தயாரித்தவர்கள்?

விடை – டில்லி IIT மாணவர்கள் & USA சான் ஜோஸ் பல்கலை இணைந்து
5) மத்திய அரசின் புதிய கொள்முதல் கொள்கையின் பெயர்?விடை – அன்னதத்தா மவுல்யா சம்ரக் ஷன யோஜனா
6) தூய்மை இந்தியா சிறப்பாக செயல்படுத்த 15.09.2019 இல் தொடங்கப்பட்ட இயக்கம்?

விடை – தூய்மையே உண்மையான சேவை இயக்கம்
7) எந்த விஞ்ஞானிமீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிந்தனர்?

விடை – நம்பி நாராயணன்
8) செப்டம்பர் 17- 22 வரை நேபாளம் மற்றும் சீனா ராணுவங்கள் இணைந்த 2வது கூட்டுப்பயிற்சியின் பெயர்?

 விடை– சாகர்மாதா
9) டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்திய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு? 

விடை-மாலத்தீவு
10) ஆப்பிரிக்க சர்வதேச வலு தூக்கும் போட்டியில் 43 கிலோ சப்-ஜுனியர் பிரிவில் 3 தங்கம் வென்றவர்? 

விடை – ஆஷிகா (புதுவை)
11) இந்தியாவில் முதன் முதலாக நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா உருவாக்கப்பட்டுள்ள இடம்?

 விடை – ஐதராபாத் அருகே கச்சிபோலி
12) இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்?

 விடை – பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்
13) பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்?

விடை- நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் (16.09.2018)
14) மங்குட் – என்ற புயல் கடுமையாக தாக்கிய நாடு?

விடை – பிலிப்பைன்ஸ் (செப்டம்பர் 2வது வாரம்)
15) நாட்டின் 30-ஆவது யானைகள் காப்பகமாக அறிவித்துள்ள இடம்?

விடை – சிங்பன் வனவிலங்கு சரணாலயம் (நாகாலாந்து)
16) மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளுக்காக பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ள இயக்கம்?

விடை – ஸ்வச்சாத ஹீ சேவா
17) Swachhata Hi Seva தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்ட திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்? 

விடை- ஜம்மு காஷ்மீர் மாநிலம்
18) இந்தியாவின் முதல் பழங்குடியினருக்கான சுற்றுலா பகுதி தொடங்கப்பட்டுள்ள இடம்?

 விடை- சட்டீஷ்கர் மாநிலம் Dhamtari மாவட்டம்
19) மேக் இன் இந்தியா திட்டத்தில், இந்திய கடலோர காவல் படைக்காக வழங்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்கள் ? 

விடை– விக்ரம், விஜயா, வீரா
20) சமீபத்தில் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்துள்ள மாநிலம்?

விடை – தமிழ்நாடு
21) இந்தியாவின் முதல் நீருக்கடியிலான ரோபோ ட்ரோன் பெயர்?

 விடை – EYE ROVTUNA
22) ஏசியன் கேம் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தவர்?

விடை-பி.வி சிந்து (சாய்னா வெண்கலம்)
23) நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டின் கருப்பொருள்? 

விடை- Towards a peaceful, prosperous and sustainable Bay of Bengal region
24) வோடோபோன் எந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளது?விடை – ஐடியா

25) உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு நடைபெற்ற இடம்? 

விடை– புதுடெல்லி

26) மும்பை விமான நிலையத்தின் பெயர் எவ்வாறு மாற்றம் செய்யபட்டுள்ளது?

விடை – சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையம்
27) புவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம்? 

விடை O-SMART
28) நிலவுக்குச் சுற்றுலாப் பயணியாகச் செல்லும் முதல் நபர்?விடை – யுஸகு மேஸாவா (ஜப்பான்)
29) இந்தியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை எம்பிஏடிஜிஎம் 2வது முறையாக பரிசோதிக்கப்பட்ட இடம்? 

விடை-அகமது நகர் (மகாராஷ்டிரா)
30) USA-ன் NASA வின்வெளி ஆய்வு மையம் கலிஃபோர்னியாவிலிருந்து ஏவிய புதிய செயற்கைக்கோள்? –விடை ICESat-2
31) மனித மேம்பாட்டு குறியீட்டு பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்? 

விடை– 130 வது இடம் (நார்வே, சுவிஸ், AUS, Ireland & German)
32) ஆள்கடத்தலை கண்டறிவதற்கும், அதற்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Swayangsiddha எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்? 

விடை- மேற்கு வங்காளம்
33) வைரவிழா (60 ஆண்டு) காணும் ஐ.ஐ.டி? 

விடை-சென்னை ஐ.ஐ.டி (1959-ல் தொடக்கம்)
34) இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

விடை – பத்மஜா சந்துரு
35) Gaganyaan-2022 திட்டத்திற்கு தலைமையேற்கும் நபர்?

விடை– லலிதாம்பிகா
36) ஆயுஷ்மான் பாரத் எனும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை? 

விடை – ஐந்து லட்சம் (ஆண்டுக்கு)
37) உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?

 விடை- ரூ.10,000 கோடி
38) சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 13வது மாநகராட்சி? 

விடை– நாகர்கோவில்
39) டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள செல்போன் வழங்கியுள்ளா மாநிலம்? 

விடை– ராஜஸ்தான்
40) ஒரு நாடு, ஒரு கார்டு என்பது? 

விடை- ரயில், பஸ், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய (பொது போக்குவரத்து)
41) உலகில் பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO) வெளியிடும் ஒன்பதாவது நாடு? 

விடை – இந்தியா
42) ரஷ்ய விமானப்படை & இந்திய விமானப்படைக்கு இடையே கூட்டு விமான போர் பயிற்சியின் பெயர்? 

விடை– அவியாந்திரா-18 (Aviaindra)
43) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது – 2018 பெற்றவர்கள்?

 விடை – வீராட் கோலி & மீராபாய் சானு (பளு தூக்கும் வீராங்கனை)
44) உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த நாடு இயக்கியது? 

விடை-ஜெர்மனி ( பிரான்ஸை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவன தயாரிப்பு)
45) இந்தியாவின் மூன்றாம் பெரிய வங்கியாக உருவெடுக்க இணையவுள்ள வங்கிகள்? 

விடை-பரோடா, தேனா, விஜயா
46) சமீபத்தில் மறைந்த சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி? 

விடை-அன்னா ராஜம் மல்ஹோத்ரா
47) தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற தமிழகத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு?

 விடை– பிரான்ஸ்
48) தென் மாநில மண்டல கவுன்சிலின் 28 வது கூட்டம் நடைபெற்ற இடம்? 

விடை – பெங்களூர்
49) இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில் நுட்ப அடைவு மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? 

விடை – அகர்தலா (திரிபுரா)
50) திறன் இந்தியா திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்? 

விடை – வருண் & அனுக்ஷா சர்மா
51) பசுமை கட்டடம் சான்றிதழ் பெற்ற முதல் ரயில் நிலையம்?

 விடை – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
52) புதிய மராத்தான் உலக சாதனை படைத்தவர்? 

விடை – கென்யன் எலியட் கிபோகேவ்
53) போலந்து நாட்டில் நடந்த மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர்? 

விடை -மேரி கோம்
54) முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் தலைச்சிறந்த பொருளாதார மையம்? 

விடை – நியூயார்க் (முன்னர் லண்டன்)
55) தேசிய பொறியாளர் தினம்?

விடை- செப்டம்பர் 15 (M.விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம்)
56) சர்வதேச போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை? 

விடை – ஜீலம் கோஸ்வாமி
57) டோசன் ஆன்சோங் என்ற தனது முதல் ஏவுகணைத் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்திய நாடு? 

விடை – தென்கொரியா
58) உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? 

விடை – ரஞ்சன் கோகாய்
59) இந்தியாவுக்கும் புருனே இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்? 
விடை – செயற்கைக்கோள் தகவல் தடமறிதல், விண்வெளி ஆய்வு, அறிவியல், தகவல் பெறுதல்
60) சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு?விடை – மால்டா
61) சியோல் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்?

விடை- கே. சகாயபாரதி (வன்ணாரப்பேட்டை)

62) அக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

விடை – அமிதாப் செளத்ரி

63) சரளா புர்கர் விருது பெற்றவர்?

விடை – சத்ருகனா பாண்டவ், ஒடியா கவிஞர் (மிஸ்ரா துருபத் கவிதைத் தொகுப்புக்காக)
64) செக் நாட்டில் நடந்த IAAF தடகள காண்டினென்டல் கோப்பைக்கான போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர்

விடை – அர்பிந்தர் சிங்
65) யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன்? – ஜேமி மர்ரே (ENG)

விடை–பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (USA) ஜோடி
66) அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய வீரர்?

விடை – ருத்ர பிரதாப் சிங்
67) ஜப்பான் நாட்டை தாக்கிய புயல்?

விடை-ஜெபி புயல் (கொரிய மொழியில் விழுங்கு என்று பொருள்)
68) US அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய புத்தகம்? வெளியிட்டவர்? – FEAR: Trump in the white house

விடை – பாப் வுட்வர்ட்
69) 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடு நடைபெற்ற இடம்? 

விடை – நேபாளம்
70) சமீபத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகள்?

 விடை – சைப்ரஸ், பல்கேரியா & செக் குடியரசு
71) நான்காவது சர்வதேச ஆயூர்வேதா மாநாடு எங்கு நடைபெற்றது?

 விடை – நெதர்லாந்து
72) 2018ம் ஆண்டிற்கான டாக்டர் B.C.ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 

விடை – டாக்டர் பசந்த் குமார்
73) நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனம்?

விடை  – வோடோபோன் ஐடியா
74) ஆசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்ற 8-வது வீரர்? 

விடை – அமித் பங்கல்
75) பசுவை தேச அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய மாநிலம்?

விடை  – உத்தரகாண்ட்
76) 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய திரைப்படம்? 

விடை – Village Rock stars (அசாமி மொழி)
77) ஜிஎஸ்டி க்கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக ரூ. 38 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள வங்கி?

 விடை – Yes Bank
78) ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட இடம்?

 விடை – ராஞ்சி (ஜார்க்கண்ட்)
79) தனது முதல் விமான போக்குவரத்தை தொடங்கியுள்ள இந்திய மாநிலம்?

விடை  – சிக்கிம் – பாக்யாங் விமான நிலையம்
80) Whats App போலி News கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவின் குறைதீர்க்கும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்? 

விடை – கோமல் லகரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *