போட்டித் தேர்வுக்கான வினா விடைகள்
போட்டித் தேர்வுக்கு தேவையான முந்தைய ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளில் வினா விடைகளை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். அவற்றை தினசரி பயிற்சி செய்து வாருங்கள் தேர்வுக்கு எது முக்கியம் மற்றும் எது முக்கியமல்ல என்பதனை தெரிந்து கொண்டால் நிச்சயமாக தேர்வை எளிதில் எதிர்கொள்ளலாம்.
மயிலை சீனி. வெங்கடசாமி ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடங்கப் பள்ளியில் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?
விடை: 25
நெருக்கடி காலங்களில் பயன்படும் ஹார்மோன் எது?
விடை: அட்ரினலின்
ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்த வீடு வழங்க எந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
விடை: ஆந்திர பிரதேசம்
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்படுவது எது?
விடை: ஊராட்சி ஒன்றியம்
மேலும் படிக்க : வினா விடை வெல்ல! போட்டி தேர்வை படியுங்க!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை?
விடை: 22
சிந்துவெளி மக்களுக்கு தெரிந்திடாத உலோகம்?
விடை: இரும்பு
சமீபத்தில் எந்த நாட்டில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது?
விடை: சவுதி அரேபியா
ஹரப்பா நாகரிகம் கண்டறியப்பட்ட ஆண்டு?
விடை: கிபி 1921
இந்திய விடுதலை நாளில் பறக்க விடப்பட்ட முதல் தேசியக்கொடி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
விடை: சென்னைக் கோட்டை
மேலும் படிக்க : குரூப் 2 இந்திய பொருளாதார ஹைலைட்ஸ் படியுங்க!