போட்டித் தேர்வுக்கான வினா விடை
போட்டித்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும். போட்டித் தேர்வு என்பது தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பங்குபெறும் அரசு வேலைக்கான தேர்வு எழுதுவது ஆகும் .இது பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். தமிழகத்திலுள்ள பொதுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-1 குரூப் 2 குரூப் 4 மற்றும் மற்ற பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன..
போட்டித்தேர்வுக்கான வினா விடைகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம் அவற்றை பயிற்சி செய்து தேர்வில் வெற்றி பெறவும்
1 சிம்பன்சி இனத்தின் மரபணுவை ஆய்வு செய்ததில் மனித இனத்துடன் அதன் பண்புகள் எத்தனை சதவீதம் ஒத்துள்ளது?
விடை 98%
2. ஹோம் எனின் என்று அழைக்கப்படுபவர்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டனர் ?
விடை: ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன
3. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் முதன்முதலில் மட்பாண்டங்கள் வேளாண்மை செய்ததற்கான தொல்பொருள் சான்று கிடைத்தது?
விடை:வேலூர் மாவட்டம்
4. ஹரப்பாவின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை ஜெபு
5. சிந்துவெளி முத்திரைகளில் எந்த வகையான உருவம் பரவலாக காணப்பட்டது?
விடை: பெரிய காளை
6. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்ககால நடுகற்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
விடை: தேனி மாவட்டத்தின் புலிமான் கோம்பை தாதப்பட்டி, புதுக்கோட்டையில் உள்ள பொற்பனைக்கோட்டை
7. கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பாண்டியன் காவாடகா என்பது என்ன?
விடை:பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள் கடல் பொருட்கள் பற்றிய குறிப்பு
8.இலங்கையின் மகாவம்சம் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
விடை பாலி மொழி
9அர்த்தசாஸ்திரம் எதைப் பற்றி விளக்குகிறது?
விடை: பொருளாதாரம் ஆட்சிமுறை