புரட்டாசி சனியில் பெருமாளுக்கு தளிகை
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை.
புரட்டாசியின் சிறப்பு சனிக்கிழமை தளிகை. திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாக கொண்டவர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவு உட்கொள்ளாமல் இருந்து சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வர். மேலும் சிலர் மாவிளக்கு போட்டு தளிகை போடுவார்கள்.
தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல், எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகியவை பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பு வாழை இலையில் பரிமாறி நிவேதனமாக படைப்பார்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 26/09/2020
கிழமை- சனி
திதி- தசமி
நக்ஷத்ரம்- உத்திராடம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- மிருகசீரிஷம், திருவாதிரை
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்- பயம்
மிதுனம்- பீடை
கடகம்- ஆதரவு
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- தோல்வி
துலாம்- லாபம்
விருச்சிகம்- செலவு
தனுசு- சுகம்
மகரம்- கவலை
கும்பம்- வெற்றி
மீனம்- சிக்கல்
தினம் ஒரு தகவல்
கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர அரிப்பு சிறு புண்கள் ஆறும்.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.