இலங்கையில் இருந்து உருவானது புரவி புயல்
புரெவி புயல் தற்போது இலங்கையில் திரிகோணமலை சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தன. இவை நான்காம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளன.
- புரெவி புயல் தற்போது இலங்கையில் திரிகோணமலை சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம்.
- வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது.
- கன்னியாகுமரி – பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையை கடக்கும்.
அதீத கன மழை
தென் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் நாளை புயல் கரையை கடக்க இருப்பதால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்திய வானிலை ஆய்வு மையம்
திரிகோணமலை டிசம்பர் இரண்டாம் தேதி கடக்கும் என்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தனர்.
நிவர் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறின. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது.