புன்னகை அரசி சினேகா பிறந்தநாள்
சின்னஞ்சிறு சிரிப்பாலே சிறியவர் முதல் பெரியவர் வரை கவர்ந்த பேரழகி சினேகாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கவர்ச்சிகரமாக இல்லாமல் குடும்ப குத்துவிளக்காக திரையுலகில் வலம் வரும் பிரபல நடிகர் சினேகா. அதே சமயத்தில் மார்டன் ஆடை அணிந்தாலும் ஆபாசமாக இல்லாமல் அழகாக தன்னை திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் படைத்தவர்.
- 2கேயில் திரைக்கு வந்து அனைவரின் மனதையும் பரித்தவர் சினேகா.
- தொடர்ந்து இருபது வருடமாக தென்னிந்தியத் திரையுலகை கலக்கி வருகிறார் சினேகா.
- சினேகா-பிரசன்னா திரையுலக ஜோடி பிரமாதம்.
- சமூகவலைத்தள பக்கத்தில் சய வாழ்க்கையை மகிழ்ச்சியோடு ரசிகர்களுக்காக பகிர்கிறார்.
- இன்று 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சினேகா.
சினேகா
12 அக்டோபர் 1981ல் மும்பையில் பிறந்திருக்கிறார் சுஹாசினி ராஜாராம் நாயுடு. பிற்காலத்தில் இந்தப் பெயர் சினேகா என்று மேடைக்காக மாற்றப்பட்டது. தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் திரையுலகில் அறிமுகமானார்.
தென்னிந்திய திரையுலகம்
மலையாளத் திரையுலகில் 2000ல் இங்கானே ஓரு நிலபாக்ஷி என்று படத்தில் பல நாட்டியங்களுடன் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் பயணத்தைத் தொடங்கினார்.
மேலும் படிக்க : நெஞ்சம் ஒருமுறை… வசீகரா படம் பாடல் வரிகள்
தமிழ் திரையுலகம்
சினேகா தமிழ் திரை உலகில் நாயகியாகும் சுசி கணேசன் இயக்குனராகவும் அறிமுகமான முதல் படம் விரும்புகிறேன் ஆனால் இதற்கு முன் என்னவளே ஏற்படும் திரையில் வெளியிடப்பட்டு சினேகாவிற்கு அது முதல் படமாக மாறியது. என்னவளே முதல் பட்டாஸ் வரை பட்டையை கிளப்பும் நாயகி சினேகா.
சின்னத்திரை
தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடிக்கிறார். சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடுவராக சின்னத்திரை பயணத்தை மேற்கொள்கிறார் சினேகா.
சினேகா பிரசன்னா
அச்சமுண்டு அச்சமுண்டு ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியது. 2009ல் அச்சமுண்டு அச்சமுண்டு படம் வெளியானது அதனைத் தொடர்ந்து 2012இல் சினேகாவை பிரசன்னா திருமணம் செய்து கொண்டார். சென்னையில் வாழும் இவர்களுக்கு இரு குழந்தைகள்.
சமூக வலைத்தளம்
வரலட்சுமி விரதம் விநாயக சதுர்த்தி என பண்டிகை நாட்களில் வீட்டில் நடக்கும் பூஜை அலங்காரங்களை படம்பிடித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சினேகா. இன்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை வைத்துள்ளார்.
மேலும் படிக்க : பிரசன்னாவின் வெற்றியை கொண்டாடிய திரை உலகம்
திரையுலகின் பல விருதுகள் என் சொந்தக்காரரான சினேகாவிற்கு 39 ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.