முதல்வர் மீது எப்ஐஆர்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறியதற்காகவும், மற்ற கட்சிகள் மீது முறையற்ற வகையில் குற்றச்சாட்டுகளை கூறியதற்காகவும் எப்ஐஆர் பதிவு செய்யுமாறு சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மூத்த எஸ்பிக்கு பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிரோமணி அகாலி தளத்தின் புகாரைத் தொடர்ந்து பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
இதற்கிடையில், நேற்று மாலை பிரச்சாரம் முடிந்ததும், மான்சா தொகுதியில் வீடு வீடாக பிரச்சாரம் செய்ததற்காக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சித்து மூஸ் வாலா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் புகாரின் அடிப்படையில், சிட்டி-1 மான்சா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 (பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாநிலத்தில் ஆட்சியிலிருந்தாலும் பஞ்சாப் தேர்தல் காங்கிரசுக்கு வாழ்வா சாவா என உள்ள நிலையில், அங்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.