பப்ஜிக்கு வைக்கப்பட்ட ஆப்பு அட்ராசக்கை சபாஷ் மத்திய அரசு!
பப்ஜிக்கு பங்கம் வந்தது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 பப்ஜி செயலி தடை செய்யப்பட்டது. பப்ஜி செயலியல் நாடு முழுவதும் இருக்கும் இளைஞர்கள் குழந்தைகள் விளையாட்டுக்கு அடிமையாகி விடியவிடிய விளையாடிக்கொண்டிருந்தனர். இதனால் பலர் இந்த விளையாட்டு இல்லாமல் இருக்க முடியாத சூழலில் அடிமையாக இருந்தனர்.
உடனடியாக கவனித்த அரசு:
இதுகுறித்து அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன உடனடியாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை களத்தில் இறங்கி ஆய்வு செய்தது. சும்மா சொல்லக்கூடாதுங்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இறங்கி வேலையை முடுக்கிவிட பப்ஜி செயலியை அதிகப்படியான இளைஞர்கள் குழந்தைகள் பெருமளவில் தங்களை அறியாமலேயே அடிமையாக இருப்பது தெரியவந்தது.
பப்ஜியால் த(ட)டுமாறிய இந்தியா:
பெற்றோர்கள் குழந்தைகளைச் சமாளிக்க முடியாமலும் குழந்தைகளைத் திசை திருப்ப வழி தெரியாமலும் இருந்தனர். ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்களுக்கும் இந்தப் பகுதி பெரும் ஆபத்தாக இருந்தது மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கணிக்க முடியவில்லை.
ஆன்லைன் வகுப்பில் படிப்பது போல சைடில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மக்களுக்குப் பேராபத்து மாணவர்கள் இளைஞர்களுக்கு இது அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அரசு இதனை உடனடியாகத் தடை செய்தது. அதை விட கொடுமையாக இந்தியாவில் இந்தப் பப்ஜியை செயலியைப் பயன்படுத்துவோர். 11 கோடி பேருக்கு மேல் இருக்கின்றனர் உலகளவில் 5 கோடியில் ஒரு கோடி இந்தியர்கள் இந்த விளையாட்டைச் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் அடிமையாக விளையாடி வருகின்றனர். இதனால் பஜ்ஜி நிறுவனத்திற்கு 10,000 கோடி அளவிற்கு வருமானம் கிடைத்திருக்கின்றது.

இந்தியா வாழ்வில் முன்னேற வேண்டும் இளைஞர்கள் முறையாக வழி நடத்தப்பட வேண்டும் என்று அரசு உன்னத நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றது. உடனடியாகக் களத்தில் இறங்கி பசியை தடைசெய்தது நாட்டின் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சீனாவாக இருந்தது.
சீன் காட்டிய சீனா சிக்கியது:
ஸ்மார்ட்போன்கள் கொண்டு செயலிகளை உருவாக்கி நம்மைத் திசைதிருப்பிக் கொண்டிருந்தது. சுமார் பத்தாயிரம் கோடிக்கு இந்தியாவிலிருந்து மட்டும் சீனா சம்பாதித்து இருக்கின்றது. இனி இந்தியா இதற்கு வாய்ப்பு தரக் கூடாது என்று முழுமையாக முடிவுசெய்து உடனடியாகக் களத்தில் இறங்கி சீனாவின் செயலிக்குத் தடை செய்தது இதனைப் பாராட்ட வேண்டும். இதுபோல் அரசு களத்தில் இறங்கி செய்யும் வேலைகள் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடிகின்றது.

தொடரட்டும் இந்தப் பணி இன்னும் இந்திய இளைஞர்களை முழுமையாகக் கண்காணித்து அவர்களுக்குள் பல்வேறு பாசிட்டிவ் எண்ணங்களைப் புதைத்து அரிய பல சாதனைகளைச் செய்ய வைக்க வேண்டும். நமது கடமையாகும் அப்போதுதான் இந்தியா எதிர்காலத்தில் ஒரு நல்ல வல்லரசாக இருக்கும்.