சமையல் குறிப்புவாழ்க்கை முறை

புரோட்டீன் கொண்ட மசால் வடை

புரோட்டீன் சத்துள்ள பருப்புகளை கொண்ட மசால் வடை. சத்துள்ள பருப்புகளை கொண்டு இந்த வடையை ஊற வைத்த அரைப்பது மட்டும் தான் வேலை. அரைத்தவுடன் சூடாக சுட்டு உடனடியாக பரிமாறலாம். இந்த வடையில் கீரை, கேரட் துருவல் சிறிது சேர்த்தும் செய்யலாம். குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

  • புரோட்டீன் சத்துள்ள பருப்புகளை கொண்ட மசால் வடை.
  • குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
  • காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

மசால் வடை

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு 200 கிராம், உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் 10, காய்ந்த மிளகாய் ஐந்து, பெருங்காயம் கால் ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன்.

செய்முறை விளக்கம்

கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, அரிசி மூன்றையும் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து விட்டு இதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையுடன் சிறிய வெங்காயத்தை பொடியாக அரிந்து போடவும். சீரகத்தை கலந்து கருவேப்பிலையும் பொடியாக நறுக்கி போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டிப் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி வேக வைத்து சிவக்க விட்டு எடுக்கவும். ஈவினிங் ஸ்நாக்ஸ் இந்த மசால் வடையுடன், ஏலக்காய் டீ உடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *