அழகு குறிப்புகள்

ஆலோவீராவுடன் இணைந்த இயற்கை பாதுகாப்பு குளியல் டிப்ஸ்..!

நீங்கள் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க விருப்பம் கொண்டவரா  அப்படியெனில் உங்கள் ஆலோவீரா அவசியமானது ஆகும். ஆலோவீரா ஜெல் ஒரு இயற்கை நிவாரணி.  அது மனிதர்களுக்கு  புறம் அகம் சார்ந்த அழகு மற்றும் ஆரோக்கியத்தை  வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது. அத்தகைய ஆலோவீரா ஜெல்லினை குளியலில் பயன்படுத்துவதன் மூலம் தலை முடி உதிர்தல் மற்றும் தோலில் உள்ள வறட்சி தடுக்கப்பட்டு மிருதுவான சருமம் பெறுதல் போன்ற  பல நன்மைகள்  பெறலாம்.

ஆலோவீரா பொடி: 

நாட்டு மருந்து கடைகளில் ஆலோவீரா பொடிக்கும் கிடைக்கும் அதனை வாங்கி குளியல் பொடியுடன்  இணைத்து குளிக்கும் பொழுது வியர்வை துவாரங்கள் திறக்கப்பட்டு  தோலில் உள்ள  அழுக்கு  மற்றும் எண்ணெய படிமங்களை நீக்குகின்றது. 
குளிக்கும் பொழுது அல்லது குளிப்பதற்கு முன்பு காற்றாழைப்   பொடியை மஞ்சள் அல்லது குளியல் பொடியுடன் இணைத்து உடலில் கைகால்ளில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும் அப்பொழுதே சருமத்தினை ஒளிர்வு கண்கூட பார்க்கலாம். 

கற்றாழை குளியல் எண்ணெய்

குளிக்கும் பொழுது பலருக்கு முடி உதிர்வு இருக்கும் அதற்க்கு  தேங்காய் எண்ணெய்,  நல்லெணெய் மற்றும் கேஸ்டர் ஆயில் எனப்படும் ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய்  கலந்த கலவையில் கற்றாழையினை நன்றாக கலந்து தலையில் தடவவும் தலையினை ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க மஞ்சள் ஒரு பிஞ்ச் மற்றும் கற்றாழை சிறித்து சர்க்கரை கலவையினை மூக்கின் நுணியிலுள்ள கரும்புள்ளிகள் இடத்தில் மாஸ்காக தடவி அரை மணி நேரம் கழித்து  காட்டானால் நன்கு துடைக்கவும். முகத்திலும் இந்த பாக்கினை பயன்படுத்து பொழுது முகம் பொலிவு பெற்று அழுக்குகள் மாயமாய் மறையும். 

பாதங்களை சுத்தமாக கழுவி கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் கலவை கொண்டு காட்டானால் துடைத்தால் கால்களின் இறந்த செல்கள் நீக்கப்படுவதோடு இயற்கை மாஸ்காக அது விளங்கும்.
இவ்வாறு ஆலோவீரா ஜெல்லினை கொண்டு இயற்கை குளியலினை செய்து மிளிர செய்யலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *