பட்டுபோன்ற பாதம் வேண்டுமா இதோ ஈசி டிப்ஸ்
உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்பு இரண்டே நாட்களில் குணமாக எளிய முறை அது என்னவென்று இப்போது பார்க்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரை எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். சாம்பூ அரை ஸ்பூன் சேர்த்து அதனுடன் பன்னீர் ரோஸ் இதழ்களை சேர்க்கவும்.
பிறகு கால்களை 30 நிமிடங்கள் வைத்து நன்றாக தேய்க்கவும். பிறகு ப்யூமிக்ஸ் கல்லை கொண்டு தேய்க்க வேண்டும். தினசரி இரவு கால்களை கழுவி நன்றாக துடைத்து பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் வைத்து நன்றாக மசாஜ் செய்து வர கால்கள் இரண்டும் வலுவுடன் இருக்கும்.
வாரம் ஒரு முறை கற்றாலை ஜெல், தேங்கய் எண்ணெய் , காப்பி பொடி சேர்த்து காலில் 15 நிமிடம் ஊர வைக்க வேண்டும் . சர்க்கரை மற்றும் தக்காளி நல்ல ஸ்கிரப்பராக இருந்து காலில் படியும் அழுக்குகளை எளிதில் போக்கும்.
தூசு நிறைந்த இடங்களுக்கு சென்று வந்தது கால்களை நன்றாக கழுவி எடுக்கவும். காலணி காட்டனில் அணிந்து கொள்ளுதல் சிறப்பு தரும். சிலருக்கு கிராணைட் , மார்பில் கற்கள் உட்லில் ஒத்துக்காத சூழல் இருக்கும். அப்படியானவர்களா நீங்கள் உங்களுக்கு என சூ டைப் வெல்வெட் ஸ்லிப்பர் கடைகளில் கிடைக்கின்றது அதனை வீட்டிற்குள் அணிந்து செயல்படுங்கள்.
தினசரி கால்க்ளை நன்றாக அழுத்தி விட வேண்டும். அக்குபஞ்சர் புள்ளிகள்போல் இது செயல்பட்டு உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். விரல் நகங்களை சரியாக நறுக்கி வைக்க வேண்டும். மருதாணி வாரம் ஒருமுறை வைக்க வேண்டும். இவ்வாறாக நாம் கால் பாதங்களுக்கு கொடுக்கும் கவனிப்பு கால்களில் ஏற்படும் வெடிப்பு சரி செய்யும். இறந்த செல்களை நீக்கும். பார்ப்போரை கவி சொல்ல வைக்கும்.