நம்ம முத்தழகா இவங்க! பிரியாமணியின் போட்டோஷூட்
பருத்திவீரன் முத்தழகு நினைவிருக்கிறதா! மறக்க முடியுமா! அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் யாரந்த கதாநாயகி என்று திரையுலகம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரியாமணி.
பிரியாமணி ஃபேஷன் மாடலாக பயணத்தை தொடங்கியவர் 2002ல் தெலுங்கு படத்தில் நடிக்கத் துவங்கி அந்த படம் 2003 இல் வெளிவந்தது. அறிமுகப் படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. பின் 2007இல் பருத்திவீரன் சூப்பர் டூப்பர் ஹிட்டாக வந்தது. முத்தழகு கதாபாத்திரத்திற்கு பல விருதுகள் குவிந்தன.

அதனைத் தொடர்ந்து அடுத்து தெலுங்கு படம் ஹிட்டாக கனடா மலையாளம் என வெவ்வேறு துறை உலகங்களும் பிரியாமணியை கதாநாயகியாக புக் செய்தனர். இயக்குனர் மணிரத்னம் ராவணன் படத்தை தமிழ் ஹிந்தி என இரண்டு மொழியில் இயக்க பிரியாமணியை ஹிந்தி திரை உலகமும் கண்டறிந்தது.
மைதான்
அஜய் தேவ்கன் பிரியாமணி முன்னணி நடிகர்களாக வெளிவரப்போகும் ஹிந்தி படம் மைதான். கால்பந்து விளையாட்டை சம்பந்தப்பட்ட திரைக்கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 2019ல் ஆகஸ்ட் மாதம் துவங்கியுள்ளது.
மனிதன் படம் ஒரு உண்மையான கதையால் ஈர்க்கப்பட்டது. கால்பந்து விளையாட்டின் பொற்காலமாக 1952-இல் இருந்து 1956 வரை இருக்கும் சரித்திரக்கதையாக உருவாக்கப்படுகிறது இந்த திரைப்படம்.

சமூக வலைத்தளம்
பிரியாமணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மாதம் வெளியான மைதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு இருந்தார். இந்தப் படம் சொல்லப்படாத கதையாக ஒவ்வொரு இந்தியரையும் புகழ் அடையச்செய்யும் என தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படம் 13 ஆகஸ்ட் 2021 வழிகாட்டுகிறது. இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15யை ஒட்டி அடுத்த வருடம் வெளியாக உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்குது தெரியுமா!
சரித்திரக் கதை என்பதால் அந்தப் பழமையான காட்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன விளையாட்டு மைதானம் அதில் அஜய் தேவ்கன் கால்பந்துடனும் மற்றும் விளையாட்டு வீரர்கள் பின்னால் ஒருவரின் தோளில் இன்னொருவர் கைபோட்டு நிற்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து பிரியாமணி அற்புதமான போட்டோ ஷூட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’ என்பது போல கருப்பு நிற சுடிதார் அணிந்து அட்டகாசமான புகைப்படங்கள் அள்ளித் தந்துள்ளார்.