இந்திய விண்வெளி துறையில் வளர்ச்சி பெறும் இஸ்ரோ சிவன்
விண்வெளித் துறையில் இந்தியா முக்கியமான வளர்ச்சியில் உள்ளது என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு என்பதனை அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்து வருகின்றது.
அதற்கு நமது இஸ்ரோவின் விஞ்ஞானி சிவன் அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது பிரதமர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது குறித்த ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இதனை இஸ்ரோ விஞ்ஞானி சிவன் அவர்கள் வரவேற்பு கொடுத்துள்ளார் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிகரற்ற உயர்ந்த நிலைக்கு செல்ல உள்ளது. தனியார் நிறுவனங்கள் விண்வெளித்துறையில் பங்கேற்பதன் மூலம் இந்தியாவின் விண்வெளித் துறை சாதனை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
ராக்கெட் செயற்கைக்கோள் உருவாக்குதல் இதுபோன்ற சேவைகள் அனைத்தும் வர்த்தக அடிப்படையில் நடத்தும்போது தனியார் துறைகளின் ஊக்குவிப்பு விண்வெளித்துறையில் உச்சகட்டமான வளர்ச்சியில் கொண்டு நிறுத்து.
இதன்மூலம் இந்தியா பல்வேறு சாதனைகளை செய்ய உள்ளது தனியார் துறைகளின் பங்கீடு என்பது இன்னும் நாட்டை நாட்டை விரிவு பாதையில் கொண்டு செல்வதுடன் மக்களுக்கு விண்வெளித்துறை குறித்த விழிப்புணர்வு, வர்த்தகம் துறையினர் மூலம் அதிகரிக்கும்.
இதனால் இந்தியா உச்சகட்ட நிலையை அடையும் என்று விண்வெளி துறையின் தலைவர் சிவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இது ஆரோக்கியமானதா என்பது குறித்து பலர் பல கருத்துக்கள் தெரிவித்தாலும் அரசுக்கு இருக்கும் அதே பொறுப்பு தனியார் நிறுவனங்களுக்கும் இருக்கும் மேலும் அரசு அதனை முக்கியமாக கண்காணிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
வர்த்தக ரீதியாக விண்வெளித்துறை செல்லும்போது வளர்ச்சி நிச்சயம் அதிகரிக்க செய்யும் இலக்குகள் அதிகரிக்கலாம் புதிய கண்டுபிடிப்புகள் பெறுக செய்யலாம். இந்தியா உச்சகட்ட வளர்ச்சியை பெறும் போது நாட்டில் பல்வேறு வளர்ச்சிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
இதனை இந்திய ஆரோக்கிய பாதையில் கொண்டு செல்லும் அரசும் அதனை முழுமையாக கண்காணித்து வளர்ச்சிப்பாதையில் தேசத்தை கூட்டிச் செல்லும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தேசத்தின் வளர்ச்சி முக்கியம். அதுவும் எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் நாட்டின் பல துறைகள் பாதுகாப்பற்ற ஊக்குவிப்பு குறைந்த நிலையில் இருத்தல் என்பது வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. அதனாலேயே அரசு இந்த முடிவை எடுக்கும் என்று நம்பப்படுகின்றது.