அழகு குறிப்புகள்

உங்களுக்கு பாதவெடிப்பு போகணும்னா இத பண்ணுங்க…!

 நமது தோலில் எப்பொழுதெல்லாம் தண்ணீர் சத்துக் குறைகிறதோ அப்பொழுதெல்லாம் தோல் வெடித்து பித்த வெடிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு பெரும்பாலும் இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, பாதங்களை சுத்தமாக பாதுகாக்காமல் இருப்பதுதான் இதற்கு காரணம். இந்த வெடிப்பு மேலும் புண்ணாகி அதனால் அவஸ்தைப்படு பவர்கள்  அதிகம் இருக்கின்றனர்.

 இந்தப் பதிவில் இருக்கும் குறிப்புகளை பின்பற்றி உங்கள் பாதங்களை காத்துக்கொள்ளுங்கள்.

மருதாணி

 மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் நன்றாக தேய்த்து வந்தால், பித்தவெடிப்பு நாளடைவில் குணமாகி விடும். எலுமிச்சை சாற்றை சுடுதண்ணீரில் கலக்கி கால்களை நன்றாக ஊற வைத்து கழுவி வந்தால் பாத வெடிப்பு குணமாகி விடும்.

கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் நன்றாக ஊற வைத்து கழுவினால் வெடிப்பு ஏற்படுவது நின்றுவிடும். பொதுவாக வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்து வார்கள். உப்புத்தண்ணீர் அதிகநேரம் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படுவது சரியாகிவிடும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி, அதில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை தேய்த்து கழுவினால் பாதத்தில் ஏற்பட்டுள்ள கெட்ட செல்கள் உதிர்ந்து வெடிப்புகளும் சரியாகிவிடும். இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது பின்பற்ற வேண்டும்.

விளக்கெண்ணெய்

 விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன், பன்னீர் ஒரு டீஸ்பூன் அனைத்தையும் கலந்து வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால் வெடிப்பு நீங்கி விடும் அல்லது இரவு நேரத்தில் தினமும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைத்து பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *