NATO நாடுகள் மீது உக்ரைன் அதிபர் காட்டம்..!
இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே. உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, NATO நாடுகள் மீது கடுமையான விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
வெறும் 50 டன் டீசலை உங்களால் உக்ரைனுக்கு வழங்க முடிந்துள்ளது. அதை வைத்து நாம் “Budapest குறிப்பாணையை” வேண்டுமானால் எரிக்கலாம்.BudapestMemorandum: சோவியத் கால அணு ஆயுதங்களை உக்ரைன் கைவிட்டதற்கு ஈடாக, 1994இல் அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களின் குறிப்பாணை ஆகும்.
அவர் மேலும் கூறியதாவது: உக்ரைனின் வான்வெளியை மூடினால், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நேரடியாகத் தூண்டும் என NATO நாடுகளே ஒரு கதையை உருவாக்கியுள்ளன. இது பலவீனமான, தன்னம்பிக்கை இல்லாதவர்களின் செயலாகும்.
உக்ரைன் மீது குண்டுவீசுவதற்கு NATO நாடுகளே பச்சைக் கொடி காட்டுகிறது. நீங்கள் உக்ரைனின் வான்வெளியை மூடியிருக்கலாம். உங்களால் யாரைப் பாதுகாக்க முடியும்? நீங்கள் உண்மையில் NATO-வில் உள்ள உறுப்பினர்களையாவது பாதுகாப்பீர்களா? என்று கூட தெரியவில்லை என ஜெலன்ஸ்கி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒரு வல்லரசு நாடு, தானாகவோ அல்லது பெரிய வல்லரசுகள் ஒன்று சேர்ந்து கூட்டாகவோ வேறொரு நாட்டின் வான்வெளி இறையாண்மை மீது விதிக்கப்படுவது No fly zone உத்தரவாகும்; அதை மீறி வேறோரு நாட்டின் விமானம் பறந்தால், அந்த நாடுகள் தாக்குதல் நடத்தி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.