செய்திகள்ராணுவம்

எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும்..!! உதவிக்கரம் நீட்டும் மால்டோவா அதிபர்..!!

உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தஞ்சம் அளிக்க தயார் என்று மால்டோவா நாட்டின் அதிபர் மையா சண்டு தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் மோதல் இன்று போராக வெடித்துள்ள நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைகள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைனின் லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் தற்போது நடந்து வருகின்றன.

இந்த தாக்குதலில் சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு ரஷ்யா போரை நடத்தி வருகிறது. இந்நிலையில், போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தனியாக செல்ல இயலாதவர்கள் ரயில்களை பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. அவர்களை லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்து உள்ளனர். உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு உக்ரைன் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் அளிக்க தயார் என்று மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பால் உக்ரைன் எல்லையோர மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *