ஆந்திராவில் மாமியார் அசத்தல் குடுத்து வைத்த மருமகன் 67 வகையான உணவு
அன்றாடம் சமைக்கும் உணவுகளை தயாரிப்பதற்கு வழியில்லாமல் இருக்கும் நாம். நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில், இப்பெண்மணியின் கைவண்ணம் சமைத்தது பாராட்டுக்குரிய விஷயம்.
வீட்டிற்கும் வரும் உறவினர்களை எப்படி கவனிக்கலாம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆந்திரப் பெண் ஒருவர் தனது சமையல் கைவண்ணத்தால் அசத்தியுள்ளார்.
தனது வீட்டிற்கு வரும் மருமகனை வரவேற்க ஐந்து கட்டமாக உணவு பரிமாறுவதற்கு ஆக அந்தப் பெண்மணி 67 வகையான உணவுகளை தயாரித்துள்ளார்.
வரவேற்பு பானம் முதல் சாப்பிட்டு முடித்தபின் போடவேண்டிய பீடா வரை தன் கைவண்ணத்தைக் காண்பித்துள்ளார். நம் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் சிறியதோ பெரியதோ எதுவாக இருந்தாலும் உணவகங்களை தேடி செல்வோம்.
வார விடுமுறை அன்றும் கூட கடைக்கு சென்று சாப்பிட்டு வரும் இந்த உலகத்தில் இப்படியும் அசத்த முடியும் என்று காண்பித்துள்ளார்.
ஆந்திராவில் மருமகனை வரவேற்க மாமியார் ஒருவர் 67 வகையான உணவு பதார்த்தங்களை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆர்டர் செய்தால் அரைமணிநேரத்தில் உணவு வீட்டிற்கு வந்துவிடும் என்ற மனநிலையில் மக்கள் பழகியுள்ளனர். உறவினர்களை வரவேற் பதற்கும் பேக்கரி ஸ்வீட் மற்றும் கூல்ட்ரிங்ஸ் பயன்படுத்துகிறோம்.
ஊபர் ஈட்ஸ், சொமோட்டா, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் வருகைக்கு பின்னர் பலர் சமைப்பதை குறைத்து விட்டோம் என்று சொல்லலாம். ஆர்டர் செய்தால் அரைமணி நேரத்திற்குள் உணவுகள் வந்துவிடும்.
ஆனந்த் என்பவர் மருமகன் வரவேற்பிற்கு மாமியாரின் சமையலைக் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதற்கான நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான தகவல்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இவர் பதிவிட்ட வீடியோவை லட்சத்திற்கும் மேலாக பார்வையிட்டுள்ளனர். 2.5 மேற்பட்டோர் லைக் செய்தது குறிப்பிடத்தக்கது.