அழகு குறிப்புகள்

ஹெர்பல் ஷாம்பூ தயாரிக்கும் முறை..!

ஹெர்பல் ஷாம்பூ  வீட்டிலேயே செய்யும் முறையை பின்பற்றி தயாரித்து  பயன்படுத்துங்க  இயற்கை முறையிலான கேசத்தை காக்க உதவும். நரைமுடியை கருமையாக்கும். ஷாம்பூ இல்லாத பழமையான காலத்தில் பூந்திக் கொட்டை நுரைவளம் கொண்டதாக கிளென்சிங் தன்மைக்காக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

ஹெர்பல் ஷாம்பூ வீட்டிலேயே செய்ய தேவையான பொருட்கள்: 

தண்ணீர் 400  மில்லி கற்றாழை 50 கிராம் ஜெல்பெரிய நெல்லி  2 எலுமிச்சை 1 கருவேப்பிலை 20 முதல் 30 இலைவெந்தயம் 1 தேக்கரண்டி பூந்திக் கொட்டையை உடைத்து  கொட்டைகளை நீக்க வேண்டும். பூந்திக் கொட்டை முடியை பளப்பளப்பாக , கண்டிசனராக, முடி உதிர்வுக்கு ஒரு தீர்வாக இருக்கும். கற்றாழை ஜெல்லை எடுத்து 50 கிராம் எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். 


கருவேப்பிலை கண்கள் மற்றும்  முடி வளர்ச்சிக்கு உதவும். 
பெரிய நெல்லி மாசு, பொடுகு மற்றும் கருகூந்தல் வளர்ச்சியை தூண்டி காக்கும் தன்மை கொண்டது. 
எலுமிச்சை சிட்ரிக் அமிலம் கொண்டது. சிறந்த ஒரு பாதுகாப்பு நிவாரணியாக  பயன்படுத்தப்படுகின்றது.  மேலும் எலுமிச்சையின் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் முடியிலுள்ள அழுக்குகளை போக்கி எண்ணெய் பசை நீக்கி நீர்மைத்தன்மைக்கு  தக்க வைக்க உதவும்.

பொடுகின் எதிரியாக எலுமிச்சையை அழைக்கலாம். 
வெந்தயம் நிறைய மருத்துவ குணம் கொண்டது முக்கியமாக ரத்த நாளங்களுக்கு உதவும் தன்மை கொண்டது. வலுக்கை தலையிலும் முடிவளர வெந்தயம் உதவுகின்றது. முடிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.

செய் முறை: ஒரு கடாயில் 400 மில்லி தண்ணீரில்  பூந்திக்கொட்டை மற்றும்  வெந்தயத்தை விட்டுக் கொதித்து நுரை வந்தபின் அப்படியே விட்டு அடுப்பிலிருந்து கடாயை இறக்கிவிடவும். அதன் பின் இரண்டு மணி நேரம் கடாயில் ஊரவைக்கவும்.

பூந்திக்கொட்டையின் தன்மை மற்றும் வெந்தயச் சத்து ஆகியவை தண்ணீரில் கொதித்து  கலந்து காட்சியளிக்கும் அத்துடன்  தனியாக பெரிய நெல்லியை பொடியாக நருக்கி கற்றாழை ஜெல்லுடன் இணைத்து அதனுடன் கருவேப்பிலையை கலந்து நன்கு அரைத்து எடுத்து கொண்டு எலுமிச்சை சாற்றினை அதனுடன் இணைத்து சக்கை தனியாக நீர் தனியாக வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

அந்த கலவை நீரை கொத்தித்து ஆர வைத்த பூந்திகொட்டை நீரை வடிகட்டி  கலந்துவிட வேண்டும். இவ்வாறு  நுரைவளம் கொண்ட ஹெர்பல்  ஷாம்பூவை வீட்டில் எளிதாக நாமே தயாரிக்கலாம்.  அதனை பிரிஜ்ஜில் வைக்காமல் ரூம் டெம்பரேச்சரில் வைத்து ஒரு மாதத்திற்கு குளியலுக்கு பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *