Prepare curryleaf powder:ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை பொடி இப்படி செஞ்சு பாருங்க!!!!
முன்னோர்கள் உணவே மருந்து என்பதை அடிக்கடி வலியுறுத்தி சென்றுள்ளார்கள் அதனை இப்போது கடைபிடிக்கிறோமா என்றால் கொஞ்சம் கூட இல்லை.ஏனெனில் முந்தைய காலகட்டத்தில் உணவே மருந்து என்ற வாக்கியத்திற்கு ஏற்றார் போல சாப்பிட்டு வந்தனர் ஆனால் இப்போது உணவே நோய் என்று வாக்கியத்தை உருவாக்கும் அளவிற்கு உணவினாலேயே பல நோய்கள் வருகின்றன. பரபரப்பு மிகுந்த இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேடி தேடி உண்பது என்பது சில பேருக்கு கடினமாக தான் இருக்கும் ஆனாலும் நம் உடலும் முக்கியமல்லவா அதனால் தான் எழுத்தில் தயாரித்து கொண்டு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் ஒரு ஆரோக்கிய பொடியை பார்க்கலாம்.
கறிவேப்பிலை பொடி செய்ய தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை என்பது அதிக மருத்துவ குணங்கள் கொண்ட இலைகளில் ஒன்றாகும் நாம் கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்பார்வை முடி கொட்டுதல் இல்லாமல் அடர்த்தியான கருமையான முடி வளர்தல் உடல் சூடு தணிதல் தேவையற்ற உடல் கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல் என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது எவ்வளவு நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை பொடியாக அரைத்து நாம் உணவு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கறிவேப்பிலை – 1 கப்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 15
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
செய்முறை
ஒரு கடாயில் மேற்குறிப்பிட்ட அளவில் சீரகம், மிளகு ,காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்கு சூடு வர வறுத்து பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .பின்பு அதே கடாயில் நாம் சுத்தம் செய்து வைத்த ஒரு கப் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்க வேண்டும் .கருவேப்பிலை மொறுமொறுவென ஆனதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்க வேண்டும். அப்போது நல்ல மொறு மொறுப்புடன் காணப்படும். இந்நிலையில் நாம் வறுத்து வைத்த சீரகம், மிளகு ,காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் நமக்கு தேவையான ஆரோக்கியமான கருவேப்பிலை பொடி தயாராகிவிட்டது.
மேலும் படிக்க : Healthy Kavuni raise puttu:ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கவுனி அரிசி புட்டு.. இந்த மாதிரி செஞ்சு அசத்துங்க
நாம் அரைத்து வைத்த கறிவேப்பிலை பொடியை சூடான சாதத்தில் போட்டு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி இது உப்பு சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். சுவைக்கு அனைவரும் அடிமையாகி விடுவர் அவ்வளவு சுவையாக இருக்கும். மேலும் இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை இது என்பதால் கறி வேப்பிலை பொடியை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வரலாம்.
மேலும் படிக்க ; ஆரோக்கிய சமையலுக்கான சில குறிப்புகள்