தமிழகத்தில் அடுத்த சவால் நிவர் புயலா !
தமிழகத்தில் நிவர் புயல் பெருமளவிற்கு மக்களை பாதிக்கவுள்ளது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நிவர் புயல் வேகம் எடுக்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது சேதங்களை ஏற்படுத்தும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தமிழகத்தில் கொரோனா சவாலை சமாளித்தப் பின்பு அடுத்த பெரும் சிக்கல் ஏற்படவுள்ளது. நிவர் புயல் மக்களை பெருமளவிற்க்கு பாதிக்கும்.
- மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் நோய்தொற்று நேரம் இது, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
அரசு அறிவுறுத்தல்
வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப அடிப்படை பொருட்களை அடுக்கி அதனை பாதுகாத்துக் கொண்டு சவாலான நேரங்களில் அரசு அறிவுத்தலின்படி செயல்படலாம்.
நிவர் புயல் காரணமாக மக்கள் தங்களை பாதுகாக்கும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆலோசனை வழங்கி இருக்கின்றது.
காற்றின் வேகம்
தமிழகத்தில் நிவர் புயல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் நவம்பர் 25, 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் கடலில் செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும்.
வீட்டைச்சுற்றி பாதுகாப்பு
வீட்டின் கதவுகள் வலிமையாக இருக்க வேண்டும் வீட்டுக்கு முன்பு காய்ந்த மரங்களை அகற்ற வேண்டும் பலகைகள் ஏதேனும் இருப்பின் அகற்ற வேண்டும் மருத்துவ பொருட்களை தயாராக வைக்கவும்.
சான்றிதழ்கள் சேகரிக்கவும்
நிவர் புயல் மூன்று நாட்களுக்குத் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி அட்டை, புத்தகங்கள் டிசி சான்றிதழ்கள் சொத்துப் பத்திரங்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் உறைக் கொண்டு பாதுகாத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவும்.
அதிர வைக்கும் கடல் அலையின் உயரம்
வட தமிழக பகுதிகள் பழவேற்காடு வரை கடல் அலையின் உயரம் எட்டு அடி முதல் 18 வரை சீரும் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் அரசு அறிவித்திருக்கும் இடங்களில் தங்கி கொள்ளலாம்.
நிவர் புயல் பெருமளவுக்கு பாதிக்கச் செய்யும் ஆதலால் குடிப்பதற்கு தேவையான நல்ல நீரை பாதுகாத்து சேமித்து வைத்துக் கொள்வது சிறந்தது.
கைவசம் வைக்கவும்
நிவர் புயல் காற்றை சமாளிக்கும் பொருட்களை கைவசம் வைக்கவேண்டும். பேட்டரி டார்ச், லைட்டுகள், சாப்பிட பேரிச்சை பழம், திராட்சை பழம், வறுத்த வேர்க்கடலை, பட்டாணி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள் கவலை வேண்டாம் எதையும் எதிர் கொள்ளும் வல்லமை நம்மிடம் இருக்கின்றது.