செய்திகள்தமிழகம்தேசியம்

விவசாயிகள் நிவருக்கு முன் செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளன.

25 பிற்பகல் கரையைக் கடக்கும்

  • நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு
  • மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
  • புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யுள்ளன. வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே 25 ஆம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

புயலின் முன்னதாகவே காப்பீடு

புயலின் தாக்கத்திலிருந்து பயிர்களை காத்துக்கொள்ள விவசாயத் துறை செயலாளர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பயிர்களை விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு காப்பீடு செலுத்த வேண்டும். இப்படி இன்சுரன்ஸ் செலுத்தினால் இது பாதுகாப்பாக இருக்கும்.

புயலால் சேதம் அடைந்த பின்னர் செலுத்தினால் ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாது. இதனால் முன்னதாகவே காப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வயல்களில் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி வயலில் தேங்கியுள்ள நீரை வடித்துவிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

தென்னை காய்களை பறித்து விட வேண்டும். அதிக அளவில் இருப்பின் செலவழித்து தென்னை மரங்களை அதிக எடை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பல மரங்கள் உள்ளிட்ட இடங்களில் கிளைகளை வெட்டி எளிதில் காற்று புகும் வகையில் கழித்து விடுதல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்க

மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25-ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல். புதுச்சேரி மற்றும் தமிழகம் இன்று முதல் 26ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *