வாழ்வில் போராடும் பிரச்சனைகளுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்! உங்களுக்காக
வாழ்வில் நினைத்தவற்றை பெறுவதற்காக விரத முறைகள் அனுஷ்டிக்கப்படுகிறது. அப்படி விரதம் இருக்கும்போது எந்தெந்த தெய்வத்திற்கு விரதமிருந்து வழிபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் கஜலக்ஷ்மி தேவியை வணங்குவதால் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் சிறப்பு திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும்.
சாதிக்க நினைப்பவர்கள் ஏழுமலையானை வணங்குவதால் அமோக பலன் கிடைக்கும். சுப நிகழ்வுகளுக்கு, சுப காரியங்களுக்கு, திருமண வைபவங்களுக்கு காமாட்சி அம்மனை, துர்க்கை அம்மனை வழிபட்டு வர வேண்டும். இதனால் தடையின்றி சுபகாரியங்கள் நடைபெறும். செல்வம் பெருக குபேரனையும், மகாலட்சுமியுடன், லட்சுமி நாராயணரையும் வழிபட ஐஸ்வர்யம் கிடைக்கும்.
திருஷ்டி விலக, பொறாமை தவிடு பொடியாக்க
குழந்தை பாக்கியம் பெறுவதற்கு சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமியை வழிபட்டு வரலாம். மாங்கல்யம் பலம் கிடைக்க மங்கள கௌரி வழிபடுதல் வேண்டும். பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி விலக, பொறாமை தவிடு பொடியாக்க முத்துமாரி அம்மனை வணங்க வேண்டும். வீரமாகாளி, நரசிம்மர், சக்கரத்தாழ்வார் தீயவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பார்கள். ஆஞ்சநேயரையும் ராஜராஜேஸ்வரியையும் வழிபட மனோதிடம் ஏற்படும்.
மேலும் படிக்க : நிலையான செல்வமும் பெற கிருத்திகை வழிபாடு.!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்க
ஆஞ்சநேயரையும், ஐயப்பன் சுவாமியையும் வணங்கி வருவதால் சனிபகவானுடைய பாதிப்புகள் குறையும். முருகனின் சுப்ரமணிய வடிவத்தையும், நவகிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானையும் வழிபட்டு வர வீடு மனை போன்ற சொத்துக்களை வாங்க அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். திருச்செந்தூர் முருகனை வழிபட, சஷ்டி விரதம் மேற்கொள்வதால் எதிரிகள் இருந்தால் எதிர்த்து போராடலாம். பகைவர்களை துவம்சம் செய்யலாம்.
நோய்கள், பிணிகள், தீர
பெரிய பெரிய ஆபரேஷன்களை எதிர் கொள்பவர்களுக்கு தட்சணாமூர்த்தி வணங்கி வருவதால் தைரியம் பிறக்கும். ஆயுள் முழுக்க ஆரோக்கியம் பெறுவதற்கு ருத்ர பகவானை வணங்க வேண்டும். நோய்கள், பிணிகள், தீராத நோய்களை தீர்க்க தன்வந்திரி பகவானை வணங்கலாம். புண்ணியவான் தட்சிணாமூர்த்தி இவரை வணங்குவதால் நோய் உடனே தீரும்.
ஆக நம்மில் உள்ள பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற தெய்வங்களை வழிபட்டு வர வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். காரியதடை நீங்க வழக்கில் வெற்றி பெற துன்பங்கள் தீர்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும். நாம் தொடங்கும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னதாக இறைவனை வணங்கிவிட்டு செய்வதுதான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும்.
மேலும் படிக்க : இங்கே உங்கள் வெற்றியை நிலைநாட்டுங்கள்.!