விவசாயிகளே உங்கள் குறைகள் போக்க வாய்ப்பு!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி விவசாயிகளுக்கு 3 ஹெக்டர் நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் வீதம் வழங்க அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ரூபாய் 6000 தொகை 3 தவணைகளாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் அவுட்சோர்சிங் நபர்கள் மூலமாக விவசாயிகள் அல்லாதவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்று அறியப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக சிபிசிஐடி குற்றவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. அந்த விசாரணையின் பெயரில் அதிகாரிகள் விவசாயிகள் ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
விவசாயிகள் மற்றும் தகவல் கொடுப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களின் தகவல்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் வெளியே சொல்லப்படாது என்று அறிவித்திருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவரம் தெரிந்தவர் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள்மூலம் தகவல்களைத் தெரிவிக்கலாம். அல்லது வாட்ஸ்அப் மூலம் தங்களுடைய தகவல்களைத் தெரிவிக்கலாம்.
சென்னையில் எழும்பூர் பாந்தியன் சாலையில் சிபிசிஐடி தலைமை அலுவலகத்திலும் தகவல்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை சிபிசிஐடி தலைமை அலுவலகம். தொலை பேக்ஸ் எண்: 044 28512510, வாட்ஸ் அப் எண் 9498181035
விவசாயிகள் எந்தவித அச்சமுமின்றி அவரவர் தகவல்களை முறையாகத் தெரிவிக்கலாம் தங்களுக்கு முழுமையாகத் தொகைகள் கிடைக்கவில்லை என்றாலும் மேலும் விவசாயிகள் அல்லாதவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள் என்றால் அதுகுறித்த தகவல்கள் தெரிந்துவிடும் சிபிசிஐடிக்கு தெரிவிக்கலாம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல நடவடிக்கையாகும் இதன் மூலம் சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் முறைகேடுகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புடையவர்கள் அவர்களின் வியர்வையில் தான் நாடு பசியாறுகின்றது. சேற்றி கால் வைத்து வெய்யிலில் காய்ந்து, மழையில் விளைச்சலை காத்து நமக்கு உணவாகத்தரும் அவர்கள் வாழ்வை சூரையாடி கற்கப் போவதற்கு எதுவும் இல்லை.