பட்டையை கிளப்பும் பாகுபலி பிரபாஸ்
கிரீன் இந்தியா சேலஞ்ச்! பிரம்மாண்ட நாயகன் பிரபாஸ் பட்டையை கிளப்பும் விதமாக காட்டை தத்தெடுத்துள்ளார்.
இந்தியாவை பசுமையாக்கும் பணியில் பலர் பல வழிமுறைகளில் இறங்கி விழிப்புணர்வையூட்டி மக்களை மரம் நட வைக்கும் செயல் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெற்று வந்தது. இந்த பணியை அரசு மற்றும் நிறுவனங்கள் பல செய்து கொண்டு வந்திருந்தது.
தற்போது திரை உலக நட்சத்திரங்கள் இந்த மிகப்பெரிய பொறுப்பில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் மகேஷ்பாபு தம்முடைய பிறந்தநாளில் மரத்தை நட்டு அதை ஒரு சங்கிலியாக மாற்றி ஜூனியர் என். டி. ஆர்., சுருதிஹாசன், இளையதளபதி விஜய் போன்றவர்களை அந்த பதிவுடன் இணைத்து செய்யுமாறு கூறி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இளையதளபதி விஜய் மரம் நடும் புகைப்படம் மிகவும் வைரலாகியது. இவரின் ரசிகர்கள் ஆங்காங்கே மரங்களை நட துவங்கினர். திரையுலக சங்கிலியாக இருந்தது இந்திய மக்களின் பொதுச் சங்கிலியாக மாறியது.
பசுமையான இந்தியா வெகு தொலைவில் இல்லை என்று மகிழும் வண்ணம் பலர் பல இடங்களில் மரம் நட்டு அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
தீர்க்கதரிசி சூர்யாவின் மரம் நடும் புகைப்படமும் இப்பட்டியலில் சேரும். இவரின் புகைப்படங்களை பார்த்து இவரின் ரசிகர்கள் அந்த செம்மையான பணியை ஆங்காங்கே விரிவடைய வைத்தனர்.
பிரபாஸ்
பாகுபலி நடிகர் பிரபாஸ் பட்டையை கிளப்பும் விதமாக ஒரு காட்டையே தத்தெடுத்து பராமரிக்க உள்ளார். ஹைதராபாத்தின் பக்கத்தில் உள்ள காசிபள்ளி ரிசர்வ் காடு 1650 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. அதனை தத்தெடுத்து பராமரிக்க உள்ளார் பிரபாஸ்.
பிரம்மாண்ட நாயகனுக்கு பிரம்மாண்டமான மனது.
எப்பொழுதுமே இயற்கை விரும்பியாக இருக்கும் அவர் இந்த ஒரு செயலால் அதிக சுத்தமான சுவாசம் கிட்டட்டும் என்று பதிவில் தெரிவித்துள்ளார். பிரபாஸ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் காணொளியாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
செம்மையான இந்த பணியை மேற்கொள்ள உதவிய ராஜ்யசபா எம்பி சந்தோஷ் குமார், வனத்துறை மற்றும் தெலுங்கானா அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்தக் காணொளியை ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என இரு மொழியிலும் பேசி வெளியிட்டுள்ளார்.