பிரம்மாண்ட நாயகன் பிரபாஸின் அடுத்த படம்
பிரபாஸ் 20 பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 10ஆம் தேதி 10 மணி அளவில் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பிரபாஸ் சொல்லும்போதே பாகுபலியின் பிரம்மாண்டம் தான் ஞாபகத்துக்கு வருது இப்பவும் பிரபாஸ் 20 படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரம்மாண்டமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
ராதே ஷ்யாம்
பிரபாஸ் 20 சொல்லப்படற இந்த படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓட படத்தோட பெயரையும் வெளியிட்டு இருக்காங்க. ‘ராதே ஷ்யாம்’ இந்த வார்த்தைல இருக்கிற காதல் படத்தோட போஸ்டர்லையும் இருக்கு. பிரபாஸ் கதாநாயகனாகவும் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் இருக்கும் ராதேஷ்யாம் படத்தின் போஸ்டர் இருவரும் காதல் தலும்பு கட்டித்தழுவி போஸ் கொடுத்து இருக்காங்க.
படக்குழுவினர்
ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் வரும் ராதே ஷ்யாம்!
என்னப்பா இயக்குனர் பெயரையே படத்துக்கு வச்சுட்டாங்களோ? செம டக்கரா இருக்கு.
பிரபாஸோட முந்தைய படங்களான சாஹோ பாகுபலி எல்லா மொழிகளிலும் பெருசா வரவேற்கப்பட்டது. அதேபோல இந்த படமும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகுது.
பூஷன் குமார், வம்சி, பிரமோத் ராதே ஷ்யாம் படத்தின் தயாரிப்பாளர். பிரபாஸின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் வெளியானவை அதே மாதிரி இந்த படமும் பெரிய பட்ஜெட்டில உருவாக்கப்படுது.
பிரபாஸ் 20 படத்தோட பாதி படம் வெளிநாட்டு லொகேஷனோட கலர்ஃபுல்லா படம் பிடிக்கப்பட்ட நிலைமைல தற்போது கொரோனானால எல்லாமே நிறுத்தப்பட்டிருக்கு.
ஃபர்ஸ்ட் லுக்
பிரபாஸ் 20 படத்தோட ஃபர்ஸ்ட் லுக்குகே ஒரு போஸ்டர் வெளியிட்டு இருந்தாங்க. ஒரு கிளாக்கு அதுல 10 மணி காமிக்கிற மாதிரி. 10 தேதி 10 மணிக்கு வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல பிரபாஸும் பூஜாவும் காதல் போஸ்ல நிக்க உங்களுக்கு பின்னாடி அடுக்குமாடிக் கட்டிடங்கள் பிரம்மாண்டமாக காட்சி அளிக்குது.
அதோட ராதே ஷ்யாம் படம் திரையரங்குகளில் 2021 வெளியாக போகுதுன்னு அதே போஸ்டர்ல போட்டிருக்காங்க. இன்ஸ்டாகிராமில் பிரகாஷ் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்து ‘இது என் ரசிகர்களுக்கு நீங்க எல்லாரும் விரும்புவீர்கள் நினைக்கிறேன்’ அப்படின்னு சொல்லிருக்காரு.
அப்போ கண்டிப்பா இந்த வருஷம் கொரோனாவால வீட்டுகுள்ளேயே இருந்து சமூக வலைத்தளங்களில் தான் வாழ்க்கை போல.