சிவனடி சேரலாம் இந்த பாடலை படித்தால்….
நாம் அனைவரும் திருமந்திரம் என்ற நூலை பற்றி அறிந்திருப்போம் இவற்றின் பெருமைகளையும் மகிமைகளையும் ஒரு சில வார்த்தைகளில் கூற முடியாது. பன்னிரு திருமுறைகளில், பத்தாம் திருமுறையாக துவக்கப்பட்ட நூல் திருமந்திரம் ஆகும். மூன்றாயிரம் பாடல்கள் அடங்கியுள்ள இந்த நூலை எழுதியவர் மிகப்பெரும் ஞானி திருமூலர் ஆவார்.
திருமந்திரம் எனும் இந்த நூல் சிவனைப் பற்றியும் சிவபெருமானை அடையும் வழிமுறைகள் பற்றியும், சிவபெருமானின் குணங்கள் பற்றியும் மட்டும் கூறும் நூல் அல்ல.. இவை உடலில் இயக்கங்கள் விஞ்ஞானம் பகுத்தறிவு உள்ளிட்ட பல விஷயங்களையும் அலசி ஆராயும் ஒரு அரிய வகை நூலாக உள்ளது. இந்த மாபெரும் பகுத்தறிவு நிறைந்த நூலில் இருந்து ஒரு பாடலின் கருத்தை பின்வருமாறு காண்போம். இந்த பாடலை நாம் படிப்பதன் மூலம் சிவபெருமானை அடையும் வழிமுறைகள் என்னென்ன என்பதை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்..
பாடல்
உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி வியந்தும் அரன்அடிக்கே முறை செய்மின் பயந்தும் பிறவிப் பயனது ஆகும் பயந்து பரிக்கில் அன்பான்மையின் ஆமே
பாடலின் விளக்கம்
இறைவனை வணங்கும் நெறிமுறையால் மேம்பட்டும், இறைவனைப் பணிந்தும், அந்தப் பணிவில் மனம் மகிழ்ந்தும், ஐந்து எழுத்து மந்திரமான நமச்சிவாய என்ற சொல்லை அகத்தில் நிலைநிறுத்தி சிவபெருமானுக்கு தொண்டு செய்யுங்கள். அதோடு இந்த பிறவிக்கு அஞ்சி, இறைவனை தொழுது வந்தால் அது பெரும் பயனைத் தரும். உள்ளத்தில் பயபக்தியோடு இறைவனை வழிபட்டு, சைவ நெறியை பின்பற்றும்போது சிவத்தோடு ஒன்றலாம்.
மேலும் படிக்க ; ஸ்ரீ வைத்யநாத ஸ்தோத்திரம்
இவ்வாறு சிவனடிகளை சேர நாம் பெரிய பெரிய தியானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை அவரை மனதார பயபக்தியோடு வழிபட்டாலே அவரின் அருளைப் பெறலாம்.