ஆன்மிகம்ஆலோசனை

பஞ்சமியன்று பூஜிக்கும் வாராஹியின் சக்திகள்

பஞ்சமி அன்று வாராஹியை பூஜிப்பது ஏன்? வாராஹி யார்? எதற்காக பூஜிக்க வேண்டும்? எதைக் கொண்டு பூஜிக்க வேண்டும்? எப்படி பூஜிக்க வேண்டும்? இப்படி பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதிலாக அமையும்.

பன்றி முகத்துடன் கூர்மையான கண்களுடன் காட்சியளிப்பவள் வாராஹி. வாராஹினுடைய சக்தி முழுவதும் நாசியில் வைத்துக்கொண்டு சுவாசத்தால் அனைவரையும் காப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ லலிதையின் சேனையில் இருக்கும் வாராஹி பக்தர்களை பக்தி மூலமாக ஸ்ரீ லலிதையிடம் சேர்க்கும் சக்தி உடையவள். அனைத்து இன்னல்களில் இருந்து காக்க வாராஹி நாமத்தை மூன்று முறை உச்சரித்தாலேயே போதுமாம்.

4×5 original

ப்ராம்மி மகேஸ்வரி கௌமாரி வைஷ்ணவி வாராஹி இந்திராணி சாமுண்டி- சப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராஹி. தைரியம் வீரியம் விஜயத்தின் ஸ்வரூப்பமாக திகழ்பவள் வாராஹி. சப்த கன்னிகளின் ஒருவராக விளங்குவதோடு மகாவிஷ்ணுவின் சக்தியாகவும் விளங்குகிறாள்.

மகாவிஷ்ணுவின் சக்தி

கிருதயுகத்தில் இரண்யாட்சகனை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த வராஹ அவதாரம் பன்றி முகத்தோடு தோற்றமளிக்கும். அந்த மகாவிஷ்ணு அவதாரத்தின் சக்தியாகவும் திகழ்கிறாள்.

வீடு கொடுப்பாள் வேண்டும் வரம் தரும் ப்ருஹத் வாராஹி அவளே

பூமியை மீட்டு வந்ததே மகாவிஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் நோக்கமாக இருந்தது. அதேபோல் வாராஹியும் பன்றி முகத்தில் இருக்கும் தித்திப் பல்லில் பூமாதேவியை வைத்திருப்பதாக வாராஹியின் அவதாரத்தை விளக்கும் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வாராஹியை பூஜிக்கவும்.

துஷ்ட சக்தி அல்ல

வாராஹியை கொடூரமான தெய்வமாக கருதி பலர் பூஜை அறையில் வைப்பதில்லை. பன்றி முகத்துடன் தண்டம் உடுக்கை வைத்திருப்பதால் வாராஹியை துஷ்ட சக்தியாக பலர் கருதுகின்றனர் ஆனால் அவள் துஷ்ட சக்தி அல்ல துஷ்ட சக்தியை களையும் தெய்வீக சக்தி. வாராஹியை பூஜிப்பவர்களுக்கு எந்தவிதமான துஷ்ட சக்தியும் அண்டாமல் காக்கக் கூடியவள்.

கருணையின் உருவானவள் வராஹி

பக்தர்களின் குரலுக்கு விரைவில் பதிலளிக்கும் காருண்யா மூர்த்தியாக விளங்குபவள் வாராஹி என ஸ்லோகங்கள் கூறுகின்றன.

வாராஹி பூஜை

தஞ்சை பெரியகோவிலில் வாராஹி தனி சன்னதி அருள்பாலிப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். விசேஷ பூஜைகள் பஞ்சமியில் நடைபெறும். ஆடி மாசத்தில் வாராஹிக்கு ஆஷாட நவராத்திரி என சிறப்பு பூஜைகள் நடைபெறும். பொதுவாக அம்பாளிற்கு உகந்த நாட்களான செவ்வாய் வெள்ளி அஷ்டமி போன்ற நாட்களில் வாராஹி பூஜைக்கும் பொருந்தும். நம் வீடுகளில் வாராஹியை பூஜையறையில் வைத்து பூஜிக்கலாம்.

அவரவருக்குத் தெரிந்த லலிதா சஹஸ்ரநாமம் தேவி மகாத்மியம் போன்ற அம்பாளின் பொது ஸ்லோகங்களை கூறி வாராஹியை பூஜிக்கலாம். அரளி குங்குமம் மாதுளை மாதுளை மரத்தின் இலை மருதாணி இலை வைத்து பூஜிப்பது விசேஷம் மற்ற பூக்களையும் பூஜைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.

வாராஹியின் நைவேத்தியம் விசேஷம். தயிர் சாதத்தில் மிளகு தட்டி சேர்த்து நைவேத்தியமாக படைப்பர். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து தேன் கலந்து வைப்பர். கருப்பு உளுந்தில் வடை மற்றும் சுக்கு கலந்த பானகம் போன்றவை செய்வது விசேஷம்.

அன்னை வாராஹியை பூஜித்து இன்னல்களிலிருந்து விடுபட்டு அவளின் அருளாலே அவள் தாள் பணிவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *