தீபாவளி திருநாளில் சக்தி வாய்ந்த கேதார கௌரி விரதம் 2023 இருக்கும் நேரம்,முறை,பயன்கள்
சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி 21 நாட்கள் சிவபெருமானின் நினைவை தவிர வேறு எந்த சிந்தனையும் என்று கடும் தவம் புரிந்து அவரின் தவத்தின் பலனாக சிவபெருமான் தன் உடலில் பாதியை பார்வதி தேவிக்கு சரி பாதியாக தந்து வரம் புரிந்த மகா சக்தி வாய்ந்த விரதமே கேதார கௌரி விரதம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த மகா சக்தி வாய்ந்த கேதார கௌரி விரதத்தை பெண்கள் இருக்கும் பொழுது அவர்கள் நினைத்த அனைத்து வரங்களையும் சிவபெருமான் அவர்களுக்காக கொடுப்பார் என்பதை ஐதீகம்.
கேதார கௌரி விரதம் 2023 துவங்கும் நேரம்
சிவனை விட்டு இமைப்பொழுதும் பிரியாத வரம் வேண்டும் என்பதற்காக பார்வதி தேவி மேற்கொண்ட இந்த கேதார கௌரி விரதம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. கேதார கௌரி விரதம் ஆனது புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் துவங்கி ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவடைகிறது. இந்த வருட கேதார கௌரி விரோதமானது ஆங்கில வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி துவங்கிய நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி திருநாள் அன்று முடிவடைகிறது. எனவே கேதார கௌரி விரதம் இருக்க விரும்பும் பெண்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட 21 நாட்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும். 21 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் உங்களின் வசதிக்கு ஏற்ப 15 நாட்கள் ,9 நாட்கள், 5 நாட்கள் ,3 நாட்கள் அல்லது தீபாவளி திருநாளான நவம்பர் 12ம் தேதி ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடலாம்.
கேதார கௌரி விரதம் 2023 எப்படி இருப்பது?
கேதார கௌரி விரதம் இருக்க விரும்பும் பெண்கள் முதலில் முழு முதல் கடவுள் ஆன விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் விரதம் ஆரம்பிக்கும் நாளில் சந்தனம் , மஞ்சள் அல்லது சாணம்,களிமண் ஆகிய ஏதாவது ஒன்றில் பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்கள் தூவி அருகம்புல் மாலை அணிவித்து பிள்ளையாருக்கு பிடித்தமான நெய்வேத்தியம் வைத்து தீபாரதனை காட்டி வழிபட வேண்டும்.
அதன் பின்பு வீட்டில் கலசம் வைத்து கலசத்திற்கு மாலை அணிவித்து அப்பம் ,வடை, பழம், பாக்கு ,வெற்றிலை, சர்க்கரை பொங்கல் என தினமும் நெய் வைத்தியம் வைக்க வேண்டும். பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து 21 நாட்கள் விரதம் இருந்ததால் கோதார கௌரி விரதம் இருப்பவர்கள் பூ, பழம், வெற்றிலை, பாக்கு ,அரளி பூ, அரளி மொட்டு, விரலி மஞ்சள், தேங்காய் ,எலுமிச்சம்பழம், காதோலை, கருகமணி, என 21 பொருட்கள் வைத்து நெய் வைத்தியமாக 21 பிரசாதங்கள் வைத்து தினமும் அம்மனை வழிபட வேண்டும். கலசம் வைத்த பின்பு ஒரு மஞ்சள் கயிற்றில் 21 முடிச்சுகள் இட்டு கலசத்தின் மேல் வைக்க வேண்டும் 21 நாட்கள் விரதம் உள்ளவரை கயிறு இருக்க வேண்டும்.
21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் சூரிய அஸ்தமனம் வரை விரதம் இருந்து அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு வேளை உணவு சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். 21 நாட்கள் விரதம் முடித்து தீபாவளி திருநாள் ஐப்பசி அமாவாசை அன்று கடைசி கேதார கௌரி விரத தினத்தன்று மாலை வரை விரதம் மேற்கொண்டு மாலையில் சிவபெருமானுக்கு நெய்வேத்தியங்கள் படைத்து தீபாவளி காட்டி நீங்கள் எதற்காக வேண்டி விரதம் இருந்தீர்களோ அதனை கூறி மனதார சிவ புராணங்கள் பாடி வழிபட்ட பின்பு உங்கள் விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.
கேதார விரதம் 2023 இருப்பதன் பயன்கள்
இமைப்பொழுதும் சிவபெருமானை நீங்காத வரம் வேண்டும் என்பதற்காக 21 நாட்கள் சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி இருந்த தவத்தையே கேதார கௌரி விரதம் என்கிறோம். எனவே கணவனுக்காக பெண்கள் விரதம் இருக்கும் பொழுது கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எப்பொழுதும் கணவன் பலவீனமாக பொழுது அவனுக்கு துணையாக மனைவி நிற்க வேண்டும். அதேபோல் மனைவிக்கு அனைத்திலும் சரி பாதி உரிமைகளை கணவன் தர வேண்டும் என்பதன் அர்த்தமே தீபாவளி பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. எனவே இத்தகைய திருநாளில் கேதார கௌரி விரதம் இருக்கும் பொழுது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பாக்கியங்களும் கிடைக்கும் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்களுக்கு கூடிய விரைவில் திருமண யோகம் கூடி வரும். சுமங்கலிப் பெண்கள் இவ்விரதம் மேற்கொள்ளும் பொழுது அவர்களின் மாங்கல்ய பலன் அதிகரிக்கும் குழந்தை இல்லாமல் வாழும் கணவன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிவனும் சக்தியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிப்பதால் தான் இவ்வுலகம் அமைதியாக அன்புடன் உள்ளது.எம்பெருமான் சிவபெருமான் தனது தேவியுடன் இணைந்து செயல்படும் பொழுது தான் அவரின் சக்தி அதிகரித்தது. அதேபோல் எப்பொழுதும் கணவன் மனைவி இருவரும் இணைந்து ஒரு காரியத்தை செய்யும் பொழுது அதன் பலன் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அத்தகைய ஒற்றுமைக்கு இந்த கேதார கௌரி விரதம் வழிவகுக்கும்.