உண்ணும் உணவு எளிதாக ஜீரணம் ஆக வேண்டுமென்றால் இதை பாலோ பண்ணுங்க
நம் உடலில் முக்கிய உறுப்புகள் ஆகிய கணையம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது. ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
சக்தியும், ஆரோக்கியமும்
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.
இரத்த ஓட்டம், முழு சக்தியும்
உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. நாம் பெரும்பாலான நேரங்களில் காலை தொங்க வைத்து அமர்ந்திருக்கிறோம்.
காலைத் தொங்க வைத்து அமர்வதனால்
வாகனங்களில் பயணிக்கும் போதும் சரி. பணியிடங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் வீடுகளில் சோபா, கட்டில், நாற்காலி என உட்கார்ந்து கொண்டு காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இப்படி காலைத் தொங்க வைத்து அமர்வதனால் நமக்கு பல உடல் நல கோளாறுகளை உருவாக்குகின்றன.
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போதும் காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். சங்கடங்களை போக்க சம்மணம் இடுங்கள் என்று முன்னோர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

சம்மணங்கால் போட்டு அமர்ந்து
ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை தவிர்த்து, கட்டிலிலோ, சோபாவில் அமரும் பொழுது சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளலாம். சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.