செய்திகள்தமிழகம்

தமிழ் மொழியிலும் அஞ்சலக தேர்வு.. மத்திய அரசு அறிவிப்பு

அஞ்சலக கணக்கர் தேர்வுகளுக்கு தமிழ் மொழியிலும் எழுதலாம் என அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன.

தற்போது தமிழ் மொழியிலும் எழுதலாம் என அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. சென்னையில் நடைபெற உள்ள தேர்வில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்வு நடைபெறும் என கடிதம் மூலம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழில் தேர்வு நடத்தக்கோரி வெங்கடேசன் அவர்கள் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் பதில் கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளது மத்திய அரசு. நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தமிழுக்கு உரிய இடத்தை உறுதி செய்ய, மத்திய பணிகளில் தனது முயற்சிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *