நினைத்தது நிறைவேற்றம் எண்ணங்கள் !
நினைத்தது நடக்க வேண்டுமா நிச்சயம் நடக்கும் நம்புங்கள் மனதின் சக்தியே நம் எண்ணங்களை சீராக்கி பிரபஞ்சத்திடம் நாம் எண்ணங்களை செயலாக்கச் செய்யலாம். நாம் நினைத்தால் நிச்சயம் முடியும்.
நினைப்பதை பெற முடியும்
பிரபஞ்சத்திடம் நமது தேவையை உறுதியாக நம்பிக்கையோடு நடந்ததுபோல் நினைத்து உணர்வுபூர்வமாக நம்பும் நமக்கு வேண்டிய எதுவானாலும் பிரபஞ்சத்திடம் பெறலாம். பிரபஞ்சத்திடம் நாம் நினைப்பதை பெற முடியும் என்று நமது முன்னோர்கள் காலம் முதல் இன்றைய அதிவேக ஆய்வு காலம் வரை சொல்லப்பட்டு வருகின்றது.
ஆனால் நினைத்தது நடக்க நம்மிடம் இருக்க வேண்டியது பொறுமை மற்றும் நம்பிக்கை அவ்வாறே நினைத்தது நடந்ததுப் போல் அதனால் கிடைக்கும் பலனை எண்ணி அதனை மனதில் காட்சிப்படுத்தி தினமும் காலை எழும்பொழுதும், இரவும் தூங்கும் பொழுதும் கண்களை மூடி மனக்கண்ணால் கண்டால் நீங்கள் என்ன நினைத்தாலும் கிடைக்கப் பெறலாம்.
எண்ணங்களை நிறைவேற்றும் பிரபஞ்சத்திடம் எப்பொழுதும் நேர்மறையான வார்த்தைகள், நேர்மறையான சிந்தனையுடன் அனுகும் பொழுது நாம் எண்ணியது குறைந்த பட்சம் 90 நாட்களுக்குள் நடக்கும்.
விவேகானந்தரும் அதனை நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய் என்று கூறுவார். மேலும் இதனையே எண்ணம் போல் வாழ்வு என்றும் கூறுவார்கள்.
எண்ணங்களை ஒருமைப் படுத்தி, சிந்தனைகளை சீராக்கி, முழுமையான மனதுடன் கேட்கும் எந்த ஒரு காரியமும் நிச்சயம் நடக்கும்.
தகுதிக்கு ஏற்ற
எடுக்காட்டாக வேலை வேண்டும் என்று பிரயத்தணித்து இறைவனிடம் வேலை வேண்டும் என்று கேட்ப்பவரை விட எனக்கு வேலைகிடைத்து விட்ட நான் கேட்ட தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்துவிட்டது நன்றி இறைவா என்று தினமும் பிரார்த்தனை செய்து வர வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது வேலை கிடைத்த மகிழ்ச்சி உணர்வை காட்சிப்படுத்தி இறைவனுக்கு அல்லது இயற்கைக்கு நன்றி கூறுவதாய் மனதில் காட்சிப் படுத்தி சிந்திக்கும் எந்தவொரு செயலும் சித்தியாகும்.
மாணவர்கள் தேர்வுக்கு முன்பு படிக்கத் தொடங்கும் நாள் முதல் தேர்வு முடிந்து தேர்ச்சி பெற்ற நாள் வரை தொடர்ந்து உங்கள் தேர்ச்சி வீதம் 90% மதிபெண்களுடன் பெற்றதாக மகிழ்ச்சி என்ற உணர்வு பெருக்குடன் தினமும் உள்ளத்தில் காலை படுக்கையிலிருந்து எழும் அந்த நேரத்திலும் இரவு தூக்கம் நெருங்கி நிற்கும் வேளையிலும் தொடர்ந்து நினைத்து வந்தால் நிச்சயம் நாம் நினைத்தது நிறைவேறும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பணி மற்றும் படிப்பில் சிறந்து விளங்குவதாக எண்ணி மகிழ்ச்சி உணர்வுடன் காட்சிப்படுத்தி வர வேண்டும். இவ்வாறு நமது எண்ணங்கள் உணர்வு மூலம் சக்திப் பெற்று பிரபஞ்சத்தின் காந்த ஈர்ப்பு சக்தி மூலம் நமது எண்ணங்களை செயலாக்குகின்றது. இதனை அனைவரும் பயன்படுத்தி நினைத்த காரியத்தில் வெற்றி பெறுங்கள்.