நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனையில் நீங்கள் யார்
ஒருவித அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தின் போது நடக்காத ஒன்றை யோசித்து வருத்தப்படும் நிலை தான் ஓவர் திங்கிங். பெரும்பாலும் தன் வாழ்க்கையில் முன்பு நடந்த கேள்விப்பட்ட ஒரு விபத்து அல்லது பிரச்சனையால் மனதை ஆட்கொண்டு, அந்த சிந்தனையை மனதை நிறைக்கும் போது ஒருவித பயம். சிலர் மனதில் உருவாக தோன்றும். அந்த செயலின் மீது பயம் வெறுப்பு அல்லது கோபம் கூட உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- அதீத சிந்தனையில் இருந்து வெளிவர.
- ஒருவித அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தின் போது.
- ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசிக்கும் போது.
ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசிக்கும் போது அதுவே மனப்பதற்றம், எரிச்சல் மற்றும் ஒருவித அதிர்ச்சிகள் நம்மை தள்ளி விடுகின்றன. மனதளவில் மட்டுமல்லாமல் பல உடல் பாதிப்புகளுக்கும் வழிவகுத்துக் கொடுக்கும். மன அழுத்தத்தை அதிகரித்து சிந்திக்கும் திறனை குறைக்க செய்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாத நிலையை உருவாக்கி விடுகிறது.
அதீத சிந்தனையில் இருந்து வெளிவர
அதீத சிந்தனையில் இருந்து வெளிவர முதலில் உங்களை அதிக சோர்வு அல்லது அதிக பதற்றத்திற்கு உட்படுத்திய விசயத்தை கண்டறிந்து அதிலிருந்து வெளிவர முற்படவேண்டும். பலருக்கு நாம் ஏன் அதிகமாக சிந்திக்கிறோம் என்ற கேள்வி எழும். இதற்கான பதிலை தேட மாட்டார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் தான் நாம் வைக்கும் முதல் முற்றுப்புள்ளி.
நல்லதாகவே அமைய
இரவில் தூங்கப் போகும் போது நாளை என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்து வைக்க வேண்டும். நாள் முழுவதும் என்னென்ன நடந்தது என்பதை யோசிக்க வேண்டும். நடந்ததெல்லாம் நன்மைக்கே. நடப்பதும் நல்லதாகவே அமையும் என்பதை நம்ப வேண்டும். இப்படி நடந்து விட்டதே என்று பலரும் வருத்தப்படுவதுண்டு.
இந்த வருத்தம் பயமாக மாறி பயத்தின் விளைவாக இப்படி நடந்து விடுமோ? அப்படி ஆகி விடுமோ? என்று யோசிப்பதை தான் அதீத சிந்தனை என்று கூறுகிறோம். இந்த ஓவர் தின்கிங் நேர்மறையாகவும் பயன்படுத்தலாம். எதிர்மறையாகவும் பயன்படுத்தலாம். அது நம் கையில் தான் உள்ளது. உங்கள் சிந்தனைகள் தான் உங்களை தீர்மானிக்கிறது.