மாதாந்திர விடுமுறையில் மாதவிடாய் விடுப்பு சாதகமா? பாதகமா? நிபுணர்கள் கருத்து
மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக நடக்கும் ஒன்று. இதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. சமத்துவம் என்பது அவர்கள் இயல்பாக செயல்பட உதவுவது ஆகும். இது போன்ற கொள்கைகளை மேலும் பல நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். பெண்களை பெரும்பாலும் தாழ்வாகவே நினைக்கிறார்கள்.
இவர்கள் வாழ்நாள் முழுவதும் போராடும் போராட்டம். மாதவிடாய்க்கு விடுப்பு எடுக்க வேண்டுமா? இல்லையா? என்று அவர்கள் தீர்மானிக்க ஒரு வாய்ப்பு கொடுத்து இருப்பதை நல்ல முடிவாக கருதுகிறோம். குறிப்பிட்ட பெண்ணின் விருப்பத்திற்கு மரியாதை கொடுப்பதே சிறந்ததாக நினைக்கிறோம் என்று கூறுகின்றனர்.
ஆண்களும், பெண்களும் வெவ்வேறு உயிரியல் யதார்த்தங்கள். உடன் பிறந்தவர்கள் என்பது பணியிடங்களில் பலருக்கு புரிவதில்லை. பெண்களுக்கு மாதவிடாய் வலி என்பது இயல்பு தான். ஆனால் பெண்கள் வளரும் போது அவர்களுடைய தாய்மார்களால் மாதவிடாய் வலி என்பது மிகவும் கடினமானது. இதை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி சொல்லியே வளர்க்கப் படுகிறார்கள்.
ஒரு பணியிடத்தில் நுழையும்போது மிகவும் கடினமான உடல் வலியை சமாளிக்க வேலை நேரத்தில் ஒருநாள் விடுப்பு எடுப்பது என்பது தொழில் சார்ந்தது அல்ல என்கின்றனர். விடுப்பை அளிப்பதற்கு எடுத்திருக்கும் முடிவை போலவே மாதவிடாயின் போது ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும் அனுபவங்களும் வித்தியாசமான தாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
சில பெண்களுக்கு இது சாதாரணமாக மாதந்தோறும் நடக்கும் ஒரு நிகழ்வு. சில பெண்களுக்கு வழியையும், அசவுகரியத்தை உண்டாகும் ஒன்று. சில பெண்களுக்கு வேலை செய்வது சிரமம் இருக்கும். என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவ விடுப்பை வழங்கும் போது பிரத்யேகமாக முன்வைக்காமல் மாதவிடாய் விடுப்புகளை அதிலேயே ஏன் அனுமதிக்க கூடாது என்று கேள்வி எழுகிறது.
சமீபத்தில் ஒரு பிரபலமான உணவு விநியோகஸ்த நிறுவனம் பெண்கள் வருடத்தில் பத்து நாட்கள் பீரியட் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து சமூக ஊடகங்களில் பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் மாதவிடாய் பற்றிய இந்த முற்போக்கான முடிவை வரவேற்ற அதே சமயத்தில் வேறு சிலர் இதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தனர். என்று ஈ டைம்ஸ் விவாதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.