ஆன்மிகம்ஆலோசனை

பௌர்ணமி பூஜை ஏன் அவசியம்..!

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வருகிறது. பௌர்ணமி அன்று நாம் பொதுவாக வழிபாடு செய்தாலும், ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற பவுர்ணமிக்கு என்று தனி சிறப்புகள் உண்டு. அதன் பலன்களும் வேறுபடும். இதனால் தொடர்ந்து தவறாமல் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் நாம் இறைவனை வழிபடுதல் அவசியம்.

மேலும் சில கோவில்களில் பொதுவாக அம்மன் ஆலயங்களில் விளக்கு பூஜைகளும் நடைபெறும். பௌர்ணமி அன்று இரவு 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் இந்த விளக்கு பூஜைகள் நடைபெறும். இன்றைய காலகட்டத்தில் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால், நாம் வீட்டிலேயே சிறப்பாக இந்த பூஜையை செய்ய முடியும்.

பௌர்ணமியன்று காலை எழுந்ததும் குளித்து விட்டு பூஜையறையில் உள்ள சாமி படங்களுக்கு பொட்டு வைத்து, பூ வைத்து, உங்களால் முடிந்த அளவு நெய் தீபம் ஏற்றலாம். நல்லெண்ணை தீபம் ஏற்றலாம்.

விளக்கு பூஜை

வீட்டில் நெய் தீபம் ஏற்றினால் மிகவும் விசேஷமானது. நீங்கள் வீட்டில் பூஜை அறையில் தெய்வத்தின் மந்திரங்களை சொல்ல வேண்டும். பவுர்ணமியன்று அம்மனையும் சிவனையும் வழிபடுவது விசேஷம். பௌர்ணமி அன்று இரவு 6 முதல் 7. 30க்குள் இந்த விளக்கு பூஜையை முடித்து விடவேண்டும்.

குத்து விளக்கை சுத்தம் செய்து பொட்டு வைத்து நல்லெண்ணெய் விட்டு 5 திரிபோட்டு ஒவ்வொரு திரியும் இரட்டைப் படையில் திரித்து போட வேண்டும். இந்த விளக்கை மாலை 6 மணிக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பிறகு விளக்கிற்கு உரிய 108 போற்றி மந்திரங்களை பூ, மஞ்சள், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை வைத்து அந்த விளக்கிற்கு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

குத்து விளக்கை அம்மனாக பாவித்து அர்ச்சனையை செய்ய வேண்டும். விளக்கிற்கு முன்னால் இரண்டு வெற்றிலை, இரண்டு வாழைப்பழம், ஈடு தேங்காயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும். வாழைப்பழத்தின் மேல் மஞ்சள் சிறிது, குங்குமம் அல்லது மஞ்சள் சரடு வைக்கலாம். இவற்றையெல்லாம் வைத்து விட்டு பூஜையை தொடங்க வேண்டும்.

விளக்கு சிறிது பூவை சுற்றி வைக்க வேண்டும். பிறகு பூஜையை தொடங்கலாம். பூஜையை தொடங்கும்போது முதலில் ஆராத்தி காட்டிவிட்டு, பத்தி காட்டி மேற்கூறிய வழியில் அர்ச்சனை செய்துவிட்டு கடைசியாக தீபாரதனை காண்பித்து பூஜையை முடித்துக் கொள்ளலாம். உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதனம் செய்யலாம்.

நைவேத்யம்

சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், பச்சைப்பயறு, கல்கண்டு, அவல் பொட்டுக்கடலை, சர்க்கரை கலந்த கலவை இதுபோன்று உங்களால் இயன்ற பிரசாதத்தை நைவேத்யம் செய்வது சிறப்பு. இதனால் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும், குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மாதத்தில் வருகின்ற ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இந்த பூஜையை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *