சினிமா

பூஜா ஹெக்டேவிற்கு ராதே ஷ்யாம் படக்குழுவின் பிறந்தநாள் பரிசு

பூஜா ஹெக்டே பிறந்தநாளை முன்னிட்டு ராதே ஷ்யாம் படத்தின் கதா பாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர் ராதேஷ்யாம் படக்குழுவினர்.

  • பிரபாஸின் 20ஆவது திரைப்படம் ராதே ஷ்யாம்.
  • பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
  • ராதா கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
  • இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ராதேஷ்யாம் படத்தின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர்.

ராதே ஷ்யாம்

பிரபாஸின் இருபதாவது திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை இயக்குகிறார். பூஷன் குமார், வம்சி, பிரமோத் ஆகியோர் இப்படத்தை தயாரித்து மூவி கிரியேஷன்ஸ் பேனரில் வெளியாகுகிறது.

படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் 2021 வெளியாக இருக்கிறது. பிரபாஸுடன் இப்படத்தில் இணையும் கதாநாயகி பூஜா ஹெக்டே. ஜூலை மாதம் வெளியான திரைப்படத்தின் போஸ்டர் திரைப்படத்தின் பெயருக்கு இணங்க காதல் ததும்பும் வண்ணம் வெளியானது.

மேலும் படிக்க ; ரூம் போட்டு யோசிப்பாங்களோ! ராதே ஷ்யாமிற்கு கிடைத்த வரவேற்பு

இன்று இப்படத்தின் கதாநாயகியாகிய பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாப் பாத்திரத்தின் பெயரை வெளியிடுவதோடு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர் ராதே ஷ்யாம் படக்குழுவினர்.

ராதே ஷ்யாம் திரைப்படத்தில் பிரேர்னா கதா பாத்திரத்தின் புகைப்படத்தோடு பேரையும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர். புகைப்படத்தை பார்த்தால் ஆங்கிலோ இந்தியனாக இருப்பாரோ! என யோசிக்கத் தோன்றுகிறது.

மேலும் படிக்க : பையா படம் பாடல் வரிகள் ஏதோ ஒன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *