சினிமாசினிமா பாடல்கள்

பொன்னி நதி பாக்கணுமே…

பொன்னியின்  செல்வன் : நான்(மொழி பெயர்ப்பு   மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸின் கீழ்ரத்னம் மற்றும் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, இது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு சினிமா பாகங்களில் முதல். இப்படத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் .ஐஸ்வர்யா ராய் பச்சன் , ஜெயம் ரவி , கார்த்தி , த்ரிஷா , ஐஸ்வர்யா லெக்ஷ்மி , சோபிதா துலிபாலா , பிரபு , ஆர். சரத்குமார் , விக்ரம் பிரபு , ஜெயராம் , பிரகாஷ் ராஜ் , ரஹ்மான் மற்றும் ஆர்.பார்த்திபன் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பையும் செய்துள்ளார் . இந்தப் படம் அருள்மொழிவர்மனின் ஆரம்ப காலக் கதையைச் சொல்கிறது, பின்னர் பெரிய சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன்  ஆனார்.

ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்

நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்

பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன

மண்ணே உன் மார்பில் கிடக்க
அச்சோ ஓர் ஆச முளைக்க
என் காலம் கனியாதோ
என் கால்கள் தணியாதோ

பொன்னி மகள்
லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்

வீரா சோழ புரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய்
சகா கனவை முடிடா

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி

சோழ சிலைதான் இவளோ
சோல கருதாய் சிரிச்சா
ஈழ மின்னல் உன்னால
நானும் ரசிச்சிட ஆகாதா

கூடாதே
ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே
தம்பியே என்னாலும் வருமோடா

நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
அந்தோ நான் இவ்வழகினிலே

மேலும் படிக்க : ஹே உமையாள் தமிழ் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *