தமிழகத்தில் தொடங்கிய பொங்கல் பரிசு விநியோகம்
தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு விநியோகமானது தொடங்கப்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து இரண்டு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதனை அடுத்து தற்போது பொங்கல் பரிசு இன்று முதல் வழங்கப்படுகின்றது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் முக்கிய நகரங்களில் இன்று டோக்கன் முறைப்படி தொடங்கப்படுகின்றன. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் தொகையும் அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒரு கிலோ முழு கரும்பு வழங்க அரசு அறிவிப்பு செய்து இருந்தது .மேலும் பொங்கல் பரிசு டோக்கன் ஜனவரி 3 முதல் எட்டாம் தேதி வரை கொடுக்கப்பட்டது. இன்று தமிழக முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கப்பட்டது.
பொங்கல் பரிசுக்காக தமிழக அரசு ரூபாய் 2430 கோடி நிது ஒதுக்கீடு செய்திருந்தது. பொங்கல் பரிசு 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை வழங்கப்படும் . பரிசு தரமானதாக இருக்கின்றதா என்பதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்திருக்கின்றனர். பொங்கல் பரிசு பெறுவதற்காக கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதை தவிர்த்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது எவ்வாறு நுகர்வோர்களை கையாள வேண்டும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி ஒரு நாளைக்கு கொடுக்கப்படும் பொங்கல் பரிசு விநியோக விவரங்களை இங்கு காணலாம்.