பொங்கல் பரிசு அறிவிப்பு வந்தாச்சு!
பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் அறிவித்துள்ளது. ஜனவரி 30 டிசம்பர் 30 முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். தமிழகத்தில் பொங்கல் பரிசு அறிவிப்பு தற்போது மக்களிடையே பரவலான பேச்சாக இருக்கின்றது.
பொங்கல் பரிசு
பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை அதனுடன் ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளலாம்.
வீடுவீடாக டோக்கன்
பொங்கல் பரிசுக்கு தமிழக அரசு அறிவுத்துள்ள பொங்கல் பரிசால் சுமார் 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதற்கான செலவானது 2356 கோடி ஆகும். பொங்கல் பரிசு எந்தவித சிக்கலும் இன்றி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ள டோக்கன் முறை பின்பற்றப்படுகின்றது.
பொங்கல் கரும்பு
ஒவ்வொரு தெருவிலும் சுமார் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நாளைக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் எந்த எண் மற்றும் தேதி பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வருடம் கரும்பு பற்றிய கேள்விக்கு முதல்வர் பதில் அளிப்பாராம். மேலும் இந்த டோக்கன் தொகையை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். மேலும் தமிழகத்தில் பொங்கல் பரிசு டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 அல்லது 6 தேதி வரை வழங்கப்படும்.