போலியோ சொட்டு மருந்து முகாமா, விரலில் மை கட்டாயமா…
ஒத்திவைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து போடும் தேதி அறிவிப்பு!
இந்திய அரசு தற்போது நடந்து வரும் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து திட்டத்தை வருகிற ஜனவரி கடைசி இரு தினங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலியோ வைரஸ் சளி, இருமல், வாந்தி, எச்சில் மூலமாக காற்றிலும், மாசடைந்த உணவுகளாலும், காற்றாலும், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடியை கிருமியாகும். இது முதுகெலும்புக்கு தொற்று ஏற்படக்கூடும், இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
போலியோவால் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இருக்காது. போலியோ தொற்று உள்ள நான்கில் ஒருவருக்கு காய்ச்சல், உடல்சோர்வு, வயிற்று வலி, தொண்டைவலி, தலைவலி ஏற்படும்.
போலியோ தடுப்பூசி
போலியோ வைரஸை முற்றிலுமாக அளிக்க முடியாது என்றாலும், அதை செயலிழக்க செய்து கட்டுக்குள் கொண்டு வரவும், பரவலை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டது இந்த போலியோ தடுப்பூசி சொட்டு மருந்து. இதனை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் போலியோ பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இந்திய அரசாங்கம்
இந்திய அரசாங்கத்தால் ஒவ்வொருவரிடமும் இலவசமாக போலியோ சொட்டு மருந்துகளை 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக அளிக்கப்படும். இவ்வாறு இலவசமாக முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து கொடுப்பதால் போலியோ இல்லாத நாட்டின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
சொட்டு மருந்து முகாம்
இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி பணி தொடங்கி உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
விரலில் மை கட்டாயம்
எவ்வாறு ஒருவிரலில் மை ஆனது தேசத்தை மாற்றமோ? அதே போல குழந்தைகளுக்கு போடும் சொட்டு மருந்து வருங்காலங்களில் போலியோவை கட்டுப்படுத்துவது என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே தந்தைமார்களே, தாய்மார்களே உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்தை செலுத்தி போலியோ பரவலை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
written by
Abirami