வேட்டை அடித்த கொள்ளையர்களை தேடி போலீஸ் வலைவீச்சு தீவிரம்
பூட்டப்பட்ட வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை.
- கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை.
- சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலச்சல் அருகே சாமிவிளை பகுதியை சேர்ந்தவர் வின் ஸ்டீபன். இவரது மகன் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த மகனை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டி விட்டு, தன் குடும்பத்தோடு கடந்த வாரம் சென்னைக்கு சென்றுள்ளார்.
குடும்பத்தோடு வந்த போது வீட்டை திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. வீட்டின் அறைக்குள் இருந்த பீரோ திறந்து இருந்ததோடு அதிலுள்ள பொருட்களும் வெளியே கிடந்துள்ளன. 70 சவரன் தங்க நகைகள் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடு போய்விட்டன. இத்தகவலை போலீசாருக்கு விரைந்து தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று இப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் வெள்ளி அன்று நள்ளிரவு வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டின் பின்புறம் வழியாக தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளன. தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தக்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.