செய்திகள்தமிழகம்

போலீஸ் செய்தது மகாத் தவறு மக்கள் கொந்தளிப்பு

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காமல் சற்று தாமதமாக செல்போன் கடையை மூடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் (தந்தை மகனை) இருவரையும் போலீஸ் நாட அவர்களுடைய பேச்சு வார்த்தை முழங்க சர்ச்சையாக மாறியது. போலீசாருடன் சர்ச்சை செய்ததால் தந்தை மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக் கைதியாக கோவில்பட்டி சிறைச்சாலையில் இருவரும் அடைக்கப்பட்டனர். 22ந் தேதி திங்கட்கிழமை அன்று இரவு உடல்நலக்குறைவால் பென்னிக்ஸ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போகும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை ஜெயராஜ் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவர்கள் உடலில் ரத்தக்காயம் பல இருந்திருக்கிறது. இருவரும் வலியால் துடித்து உருண்டு பெரண்டு காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

56 வயதான ஜெயராஜுக்கும் 31 வயதான பென்னிக்ஸுக்கும் எந்த விதமான உடல் உபாதைகளின் வரலாறு இல்லை என் அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

போலீசார் குற்றவாளிகளின் ஆசனவாய்வில் லத்தியை கொண்டு அடித்ததால் அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கினால் இருவரும் சிறைச்சாலையில் இறந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

அரசாங்க நடவடிக்கை

இந்த வழக்கில் ஈடுபட்ட 2 போலீசார் இடைநீக்கம் செய்து வேறு இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இருவரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சமும் அரசாங்க வேலையும் வழங்க உள்ளது அரசாங்கம்.

ஆனால் இந்த சலுகைகளை விட இந்த சம்பவத்தை பற்றி தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சமூக வலைத்தளம்

justiceforjeyarajandfenix என்ற குறிப்பை கொண்டு அனைவரும் இந்த வழக்கிற்காக அவரவர் ஆதரவை தெரிவிக்கின்றனர்.

திரை உலகம்

பெரிய பெரிய கதாநாயக பட்டியல்கள் இருந்தாலும் ஜெயம் ரவியே முதல் குரலை எழுப்பி உள்ளார் அதனைத் தொடர்ந்து சாந்தனு பாக்கியராஜ் தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்கள் இரண்டு பக்க எழுத்துக்களால் கொந்தளித்துள்ளார். இயக்குனர் ஹரி தான் 5 படங்கள் போலீசை பெருமைப்படுத்தும் விதத்தில் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று ட்விட் செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகம்

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் இந்த சம்பவத்திற்காக குரல் எழுப்பியுள்ளார் அவரைத் தொடர்ந்து பஜ்ஜி (எ) ஹர்பஜன் சிங்கும் இதற்காக குரல் எழுப்பியுள்ளார்.

மறுபக்கம்

சம்பவத்தை தவறு என்று சொல்லி பலர் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆயுதப்படை போலீஸ் ஒருவர் அடுத்த தவறை செய்ய தயாராக உள்ளது இன்னும் மனதை நோகடிக்கிறது.

ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து ‘டேய் தம்பிகளா அடுத்த லாக்கப் டெத்துக்கு ஆல் கிடைக்கலைன்னு பார்த்தும் ஆல் கிடைச்சுடுச்சு ஆசனவாய் இருக்குதா தம்பிகளா’ என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் அனைவரும் பிரஸ்ட்ரேஷன் டிப்ரஷன் என மன அழுத்தத்துடன் இருக்கின்றன. மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர்கள் போலிஸ்காரர்கள் என இவர்கள் நேரம் பார்க்காமல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதுவும் மன அழுத்தத்தால் நிகழ்ந்த சம்பவம் ஆக இருக்குமோ? என்ற சந்தேகமும் இருக்கிறது. இதற்காக போலீஸ்காரர்களுக்கு வரிந்து கட்டிக் கொண்டு அவர்களுக்கு சப்போர்ட் செய்கிறோம் என்ற அர்த்தம் இல்லை. ஆனால் இந்த ஊரடங்கில் ஓய்வின்றி உயிரை பணயம் வைத்து மன உலைச்சலில் வேலை செய்துவருவதால் இந்த மிருகத்தனமான செயலில் இறக்கியிருக்கின்றனரோ என்ற சந்தேகம் இருக்கின்றது.

உண்மை தீர விசாரிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் அதுவே அனைவரும் எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *