காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த காவல்துறை
காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னை காவல்துறை கடந்த மூன்று மாதங்களில் திருட்டுப்போன 863 செல்போன்களை ஒரு கோடி மதிப்புள்ள செல்போன்களை கண்டுபிடித்துள்ளன.
- செல்போன்களின் அடையாள குறியீடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உதவியோடு பறிமுதல்.
- பிற மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கொண்டுவரப்பட்டது
- செல்போன் தொலைந்த பிறகு காவல்துறை கண்டுபிடித்து கொடுப்பார்களா?
காவல்துறையினர் இந்த போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. செல்போன்களின் அடையாள குறியீடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உதவியோடு காவல்துறையினர் எடுத்த சீரிய நடவடிக்கையால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. செல்போன் திருட்டு சிறிய சம்பவம் என்று நினைத்தாலும், பெரிய குற்றத்திற்கு வழிவகுக்கிறது.
ஒவ்வொருவரின் நினைவுகளும் செல்போனில் இருக்கும். இவை போனால் மிகுந்த வேதனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் உள்ளாக நேரிடும். பலரும் செல்போன் தொலைந்த பிறகு காவல்துறை கண்டுபிடித்து கொடுப்பார்களா என்று நினைத்து புகார் செய்துள்ளனர். புகார் செய்தவர்களுக்கு கண்டுபிடித்து செல்போனில் உரியவரிடம் ஒப்படைத்ததால், நம்ப முடியவில்லை என்று உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.